VIII
அகலிகைக் கற்களாய் நிற்கும் இந்த ஆயாக்களை அவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டமே மனிதர்களாக ஆக்குகிறது.
⬤
கடைசியர்கள் மையமாகும்போது, தனிப்பட்ட இழப்புக்களே ஒருவரை மனிதநேயமிக்க போராளியாக மாற்றும் என்பதை விரிவாகச் சொல்லும் கதை கடைசியர்கள். இளைஞரைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இருந்தால், தலைமுறை இடைவெளிகள் தோன்றுவதில்லை என்பதைத் 'சித்தப்பா’ மூலமாகத் தெளிவுபடுத்துகிறது இந்தக் கதை. சுயநலமில்லாத் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டிகளுக்கும் தமிழக அரசியல்-பண்பாட்டுக் களத்தில் பெரும் வெற்றிடமுள்ள இக்காலக்கட்டத்தில் தேவை. சித்தப்பாக்கள் (மாமாக்கள் அல்ல).
⬤
சரியான 'சித்தப்பாக்கள்' இல்லாதபோது ஒரு சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதைச் சித்திரிக்கிறது கலவரப்போதை. சாதி-மதம்-வர்க்கம் எனப் பல்வேறு பிரிவினைகளால் கூறுபட்டுக் கிடக்கும் நமது சமுதாயம் மனப்பிறழ்வுக்கும் மனச்சிதைவுக்கும் ஆளாகியுள்ளது என்பதன் குறியீடாகப் பன்னிர் என்ற"மனநோயாளி காட்டப்படுகிறார். ‘மின்சாரக் குப்பியால சூடுபோடும்" அதிர்ச்சி வைத்தியம் ஒருவேளை பன்னிரைக் குணமாக்கலாம். தன்னைக் கட்டிப்பிடித்த “அம்மாவின் தோளில் முகம் போட்டு அவர் உடல் வழியாய் தரையில் சரிந்தும்" அவர் குணமாகலாம். பன்னிர் கிடக்கட்டும். நாமெல்லாருமே ஒருவிதத்தில் மனநோயாளிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். இன்று கலவரங்கள் திட்டமிட்டு FÚRfû NVÔL "LrjRlTÓ ¡u \] . B Vpx (spontaneity) என்பது அரங்கேற்றப்படும் ஒரு thriller.
⬤
“எந்தக் குடியிலும் பெண் என்கிறவள் கீழ் குடிதான்” என்ற மையக்கருத்தை வலியுறுத்தும் கதை பெண்குடி இது முகம் தெரியாத