உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சீர்வரிசை முகமூடிகள்

இதனால் ஏற்படுகிற தாட்சண்யம், பெண் விடுதலையை தாமதப்படுத்துகிறது. தம்பியின் படிப்பிற்காக அக்காளும், அல்லது அண்ணனின் படிப்பிற்காக தங்கையும் தத்தம் படிப்புரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கட்டாயத்தால் இந்தப் பெண்களின் வாழ்வுரிமை கூட பாதிக்கப்படுகிறது.

சொந்தமண்ணைப் புதைத்தவர்கள் என்றாலும், இன்றைய பெண்ணிய இயக்கம் சரியான பாதையில் போகிறதா என்பதே கேள்வி. எல்லா உரிமைமீட்புப் போராட்டங்களையும் மேட்டுக் குடியினரே கைவசப்படுத்தி இருப்பதுபோல், இன்றைய பெண்ணிய இயக்கத்தையும், பெரும்பாலும் இந்த குடியினரே கையகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் விதிவிலக்காக இருப்பது பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், உ. வாசுகி ஆகியோரைக் கொண்ட அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றம் மட்டுமே. பெண்ணியத்தின் பெயரால், இவர்கள்போடும் கலை நிகழ்ச்சிகள் மேட்டுக்குடிப் பெண்கள் வட்டத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றன. இவர்களுக்கு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகள் அதிகமாத் தெரியாது. இந்த அடித்தளத்தின் முந்தைய வரலாறும் இவர்கள் அறவே அறியாதது. இவர்களுக்கு, பெண்ணினத்திற்காய் குரல் கொடுத்த அன்னி பெசன்ட், சரோஜினி தேவி, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, பியாட்ரிஸ் வெப் போன்ற போராளிப்பெண்களை அதிகமாகத் தெரியும்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மாராப்புச் சேலை போட உரிமைவேண்டும் என்று 35 ஆண்டுகாலம் போராடிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் போர் முகம் தெரியாது. “தோள் சீலைப் போராட்டம்’ என்று அரைகுறையாக அறியப்பட்ட இந்த மகத்தான உரிமைப் போராட்டம், சிவகாசி வரைக்கும் வந்ததோ, இந்தப்பெண்கள் மாராப்பு போட்ட ஒரே காரணத்திற்காக, நிர்வாண மாக்கப்பட்டு, மானபங்கப் படுத்தப்பட்டதோ, இவர்களின் உரிமையை டில்லி உயர்நீதி மன்றமும், லண்டன் உயர்நீதி மன்றமும் நிராகரித்ததோ, இன்றைய பெண்ணியக்க வாதிகளுக்கு துளிகூடத் தெரியாது. பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை மன்றம் இவர்கள் மாராப்பை முற்றிலுமாக போடக்கூடாது என்றும், அதே சமயம் மார் பகத் தை மறைக் கும் அளவிற்கு போட்டுக்கொள்ளலாம் என்றும், மதவாத பத்தாம் பசலித்தனத்திற்கு பாதுகாவலாகவும், பெண்ணுரிமைக்கு தோழமையாகவும், ஒரு தீர்ப்பை வழங்கியதும் தெரியாது. சொந்த மண்ணை, இன்னொரு மண்ணில் புதைப்பது தெரியாமலே புதைத்தவர்கள் இவர்கள்.

சமூகக்காரணிகள்

ஆனாலும், இப்போதைய பெண்ணியவாதிகளும், தங்களுக்குத்