பக்கம்:சரணம் சரணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சரணம் சரணம்

நிலயும் தெரியும்’ என்று சொல்லாமல் சொல்கிரு.ர். அவர்கள் யார்? திருமாலும் சிவபெருமானுமே இந்த இரகசியத்தை, இவ்வுண்மையை, உணர்வார்களாம். உலகமெல்லாம் நீரில் முழுகிய பிரளயத்தில் ஆலிலேயில் யோகத்துயில் புரியும் பெம்மாளுகிய திருமால் அந்த யோக நிலையில் தம் உள்ளத்திலே பரதேவதையை நிறுத்தித் தியானம் புரிகிறர். அதல்ை அவர் உள்ளத்தே நிற்கிருள் அன்னே. அவர் அறிவார் இந்த உண்மையை.

சிவபெருமானே தட்சிணுமூர்த்தியாக யோகத்தில் இருந்தபோது அம்பிகையைத் தியானித்துத் தம் உள்ளத் தில் அவளேப் பிணித்துக்கொண்டவர். சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்’ (15) என்று முன்பு கடறியிருக்கிறார் இவ்வாசிரியர்.

‘எறிதரங்கம், உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே?? என்று குமரகுருபர முனிவர் பாடுவார்.

ஆகவே, யோகத்துயில்கூரும் திருமாலும், பரமயோகி :யாய் வீற்றிருக்கும் சிவபெருமானும் தங்கள் உள்ளத்தில் அம்பிகை பொன்றாது நின்று புரிகிற அற்புதங்களே அநுபவிக்கிறவர்கள். அவர்கள் அபிராமிபட்டர் கூறும்

உண்மையை அறிவார்கள்.

இப் பொருள் அறிவார் அன்று ஆல் இலேயில் துயின்ற பெம்மானும்

என் ஐயனுமே! இதில் மற்றாெரு கருத்தும் குறிப்பாகப் புலப்படுகிறது. ஒரு பெண்மணியின் நுட்பமான இயல்பை அவள் பிறந்த விட்டாரும் கணவருமே அறிவார்கள். திருமால் அன்னே யின் சகோதரர்; சிவபெருமான் அபிராமியின் கணவர். அவவிருவருக்கும் அன்னேயின் எளிய இயல்பு நன்றாகத் தெரியும். இவ்வாறும் ஒரு பொருள் இதில் புலகிைறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/50&oldid=680629" இலிருந்து மீள்விக்கப்பட்டது