உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் வந்த கதைகளையே திருடித் தங்கள் சொந்தச் சரக்கு போல் தள்ளி விடுவார்கள். இது இப்பொழுதும் வெற்றிகரமாக நடைபெற்று வரத்தான் செய்கிறது. அந் நாட்களில் இந்தக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டியது அவ சியம் என்று தோன்றவும், நான் மாரீச இலக்கியம்' என்ற கட் டுரையை எழுதினேன். இத்தகைய வெவ்வேறு பிரச்சனைகள் அடிக்கடி அந்தப் பகுதியில் எடுத்துச் சொல்லப் பட்டுள்ளன. இவ்வாறு லட்சிய வேகத்தோடு பத்திரிகை நடத்துவது என் பது போராட்டமான வாழ்க்கை தான். அதிலும், அப்போது இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதனுல் ஏற்பட்ட சிரமங்கள், தொல்லைகள் வேறு. அவற்றை சேஷமலாபங்கள் அவ்வப்போது ஒலிபரப்பிக் கொண்டு, தன் னம்பிக்கையோடு உறுதிமொழி கூறுவதும் வழக்கமாக இருந்தது.

39-வது இதழில் காணப்படும் வரிகள் இவை :

“மனம் விட்டுச் சொல்லாமல், புரையோடின வேதனைகளேயும்; எல்லேயற்ற சோதனைகளேயும் மகாபுருஷ காம்பீர்யத்துடன் சமாளித்துக் கொண்டு, இலக்கியத்திற்காக நீங்கள் அலுப்புச் சலிப்பின்றி உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ப தை கலாமோகினி யின் காலஹரணப் போக்கிலிருந்து அறிகி றேன். செத்தவர் வாழுலகமான தமிழ் நாட்டில், இலக்கியம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு எழுத்தாளர்களும் ரசிகர்க ஒரு சக ஒன்றுசேர்ந்து இவ்வளவு தீர்மானமாக நடத்தும்இந்தப் போராட்டத்தின் போக்கு எனக்கு பீதியை உண்டாக்கு கிறது . ’ என்று ஆரம்பித்து நீண்டதொரு கடிதத்தை இலக் கிய ரசிகர் ஒருவர் எழுதியுள்ளார்.

இலக்கியத்தின் சரித்திரத்தில் இம் மாதிரி வேதனைகளும் சோத இனகளும் சர்வ சாதாரணமான விஷயங்கள்தான். நம்பிக்கை என்ற பலமும், கலே, கவிதை ஆகியவற்றின் மேல் உள்ள தன் னலமற்ற பற்றும்தான் இந்த முயற்சியின் தளர்வற்ற போக் குக்கு உறுதுணைகள். மனம் விட்டுச் சொல்லுவதற்கு அவசிய

20 / சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/26&oldid=561106" இலிருந்து மீள்விக்கப்பட்டது