542 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய
யளிக்கும் மலை போன்றவனே! தெருள அருள் - (யாங்கள்) தெளிந்த ஞானத்தைப் பெற அருள் செய்வாயாக (எ . று)
2. மருவினவர் உள்ளத்தே வாழ் சுடரே - அடைந்தவர் மனத்திலே குடிகொண்டிருக்கும் ஒளியுருவமானவனே ! நஞ்சு பெருகு ஒளியான் மேய பெருமை சோதி - (திருமிடற்றில்) விடத்தாலுண்டாகிய மிக்க பிரகாசத்தோடு பொருந்திய பெருஞ்சோதி சொரூபியே! திரு கிலா வானம் சுருங்க மிகும் சுடரே - அழகிய மதியின் கிரணம் பரந்த ஆகாயமும் சுருங்கும் படி மேலோங்கிய ஒளியே திருமேனியாக வாய்ந்தோய் ! சித்தம் மயரும் அளவை ஒழி - மனமயங்கும் காலத்தை எமக்கு நீக்கி யருள்வாயாக (எ . று.) -
இக்கவிகளிரண்டும் இரண்டு பாம்புகள் பின்னிப் புணர்ந்து விளையாடுவன போல அமைத்த சித்திரத்திற் பொருந்த வரையும் போது இரண்டு செய்யுட்களிலுமுள்ள நூற்றுப் பதினெட் டெழுத்துக்களும் தொண்ணுற்றாறாகச் சுருங்கியமையும். இவ்விரு செய்யுட்களிலுமுள்ள முதலெழுத்துக்கள் இரண்டும் ஒவ்வொன் றாக இரண்டு தலைகளிலும், ஐவைந்தாக எழுத்துக்களிருபது நான்கு மூலைகளிலும், ஐவைக்காக எழுத்துக்கள் பத்து இரு வயிறுகளிலும், எழுத்துக்கள் ஒன்பது இரண்டு வால்களிலும், எஞ்சிய எழுத்துக்கள் நடுவிலுள்ள உறுப்புக்களிலுமாக எழுதப் படும். இருபத்திரண் டெழுத்துக்கள் சந்திகளிலே நின்று இரு கவிகளுக்கும் பொதுவாக அமைவனவாம். இவை நாற்பத்து நான்கெழுத்துக்களாகும். சக்திகளுக்கு இடையிலும் ஒவ்வோ ரெழுத்து நிற்கும்.
அஷ்ட நாக பந்தம் :-இஃது ஒரு சதுரத்தின் நான்கு பக்கத் தின் புறத்திலும் இவ்விரண்டு பாம்பின்றலைகள் பொருந்த நான்கு கோணங்களிலும் கோணம் ஒன்றில் இவ்விரண்டு. வால்கள் பொருந்த எட்டுப் பாம்புகள் பின்னிக்கிடப்ப உபதேச முறைப்படி சித்திரம் வரைந்து, எடுத்துக்கொண்ட கணக் கின்படி எழுத்துக்கள் நிற்பக் கவிகள் அமைப்பதாகும். இதற்கு உதாரணமும் சித்திரமும் வந்துழிக் காண்க. (திருநாகைக் காரோ ணப் புராணம் நந்திநாதப்படலம் நோக்குக.)