பகுதி) - ஒற்றுப் பெயர்த்தல் - 559
ஒழுக்க ஞான சித்த சுத்திகளோடு நீண்ட காலம் ஆரா அன்பு செய்த ஞாலத்தார்க்கு எட்டாது பெரிதுஞ் சிறந்திருந் தும், அடியேனுக்கு எளிதாய் இன்பம் பயப்பது கச்சாலைக்கணி :
என்க. -
2. செய்யா யினியநலஞ் சேரரசர் சீராளா கையா லெனைத்தழீஇக் காதலியே யென்றழைத்த லையா தகையேய்ந் தழகார்ந்தா யென்றைக்கே நையா நிற் கின்றே னணி” - (உ.எ)
என்ற கலாவதி நாடகச் செய்யுளும் நிரோட்டகமாமாறு காண்க.
[நலம் . அழகு, நன்மை. சீராளன் - சிறப்பினை ஆள்பவன், மேலோன். தழீ இ - தழுவி. தகை - பெருந்தன்மை, ஏய்ந்து .
பொருந்தி, அழகு ஆர்ந்தாய் - அழகு நிறைந்தவனே! நனி -பெரிதும். அழைத்தல் என்றைக்கு , நனி நையா நிற்கின்றேன் என்று கூட்டுக.]
15. ஒற்றுப் பெயர்த்தல்
ஒரு மொழியுந் தொடர் மொழியுமாய் நின்று, கருதிய பொரு ளன்றி வேறு பொருளும் பயக்கத் தக்கதாகப் பாடப்படுவது
ஒற்றுப் பெயர்த்தலாகும்.
இதற்குதாரணச் செய்யுள்:
1. 'வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து.
மண்குளிரச் சாயல் வளர்க்குமாந்-தண்கவிகைக் கொங்கா ரலங்கலந பாயன் குளிர்பொழில்சூழ் - கங்கா புரமாளி கை: (௨௮)
( இதன் பொருள்:-வண்மை புயலை கீழ் படுத்து - வளப்பம் பொருந்திய மேக மண்டலத்தைக் கீழாக்கி மேலோங்கி, வானம் தரு மலைந்து - விண்ணுலகத்துள்ள கற்பக மலர்களை உச்சிமீது சூடி, மண் குளிர மண்ணுலகம் குளிர்ச்சியடைய, சாயல் வளர்க் கும்.ஆம் தன் உருவச் சாயையாகிய நிழலைப் பெருக்கும், தண்மைகவிகை கொங்கு ஆர் அலங்கல்,அநபாயன் குளிர்ச்சி பொருந்திய குடையினையும் மது நிறைந்த மலர் மாலையினையு முடைய அநபாய சோழனது, குளிர் பொழில் சூழ் கங்கா புரம்
கலாவதி நாடகம் பக்கம், 87;.பாட்டு, 144,