உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

 கீரைக் கடைக்கு எதிர்க்கடை போடும் பண் பு இந்நாட்டு வியாபாரிகளின் ரத்தத்தோடு ஊறியது. சினிமாக்கலையையும் வியாபாரமாகக் க ரு தி ய பண மூட்டைகள் 'போட்டாப் போட்டி' 'காட்டா குஸ்தி' என்று முண்டா கட்டி, பணப்பைகளை அவிழ்த்துச் சிதறினார்கள். அவர்கள் சிரமப்படாமலே பணம் திரட்ட விரும்பியதால் இம்முறை லகுவாகப் பட்டது.

அதனால் வள்ளி திருமணம் என ஒரு கம் பெணி படம் பிடித்திருந்தால் நவீன வள்ளி கல்யா ணம் என்று தலைப்புமாற்று வேலை செய்தார்கள், ஒரு கும்பல் துருவன் எ ன் று விளம்பரப்படுத் தும். வேறொரு ஸ்தாபனம் 'நவீன துருவா’ எ ன் று ஓல மிடும். ஆக, ஒரிஜினல் துருவன்’ நவீன துருவா' என்று இரண்டு குப்பைக் கூ டை தமிழ்நாட்டின் தலையில் கவிழ்த்தப்படும். இந்த மனோபாவம் இன்னும் மாறவில்லை. ஆனால் பெயர் சூட்டும் கலை விநோதம் வலுத்திருக்கிறது. முன்பு வள்ளி கல்யாணம் என்று வந்த படம் இப் பொழுது ஸ்ரீ வள்ளி என வருகிறது. ஸ்ரீ முருகன்' என வளருகிறது, கந்த லீலா என்பது! 'குமரகுரு' என்று கிளை வீசுகிறது: - கிருஷ்ணலீலை இதுவரை வந்தவை போதாது என்று இப்போ ஐந்து ஸ்தாபனங்களால் படமாக் கப்பட்டு வருகிறது. இதே போல எத்து வியாபாரங் கள் எவ்வளவோ.

புராணப்படம் என்று புரியமுடியாத முறை யில் நவநயமான பெயரைச் சூட்டி கண்ணிலே மண்

தூவும் முயற்சியில் ஈடுபடத் துணிகின்றனர் சில