2
சின்னஞ் சிறு பெண்
மற்றது ஒரு கிழவி. இருவருக்கும் வயது நூறுக்கும் அதிகமாகவே இருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு மெதுவாகவும் நின்று நின்றும் அவர்கள் நடந்தார்கள். ரஸ்தாவில் சுட்டுப் பொசுக்கும் புழுதியில் அவர்கள் மிகுந்த வேதனையோடு தங்கள் பாதங்களை எடுத்து வைத்தார்கள். அவர்களுடைய உடைகளிலும் முகங்களிலும் படிந்திருந்த ஏதோ ஒரு மயக்குத் தோற்றம் அவர்கள் வெகு தூரம் நடந்து வந்திருக்கிறார்கள் என்று மற்றவர்களை யூகிக்கும் படி தூண்டியது.
எனது யூகத்தை உறுதிப் படுத்துவது போல் அக் கிழவன் சொன்னான்:
“டொபல்ஸ்காயா கபர்னியாவிலிருந்து இவ்வளவு துரமும் நாங்கள் கடந்தே வந்திருக்கிறோம். ஆண்டவன் அருள்தான்.”
அவன் குறிப்பிட்ட இடம் சைபீரியாவில் ஒரு மூலையில் உள்ளது. ஜார் அரசாங்கம் அரசியல் கைதிகளை நாடு கடத்தி அங்கேதான் அனுப்புவது வழக்கம்.
நாங்கள் சேர்ந்து நடந்த பொழுது, அந்தக் கிழவி அன்பு நிறைந்த கண்களால் என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் ஆதியில் நீல நிறமாக விளங்கி யிருக்கும். அவள் பெருமூச்செறிந்து, கருணை கலந்த புன்னகையுடன் பேசினாள்.
“லிஸாயா கிராமத்தில் உள்ளXபாக்டரியிலிருந்து, என் பெரியவரும் கானும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். ”
"நீங்கள் ரொம்பவும் களைப்படைந்திருப்பீர்கள் இல்லையா?”