உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வானம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் 'முதலாளி புன்னைவனத்தின் மூளை சிவசைலம் என்று சிலர் சிறப்பாகக் கூறுவதுண்டு. . - ஒகோ, அதுதான் முதலாளி ஐயாவின் மேன்மாடி சதா காலியாகத் திகழ்கிறது போலும் அவர் மூளை தெருவிலும் பஸ்ஸிலும் ஹோட்டலிலும் சினிமாத் தியேட்டரிலும் திரிகிற போது வேறு எதை நாம் எதிர்ப்பார்க்க முடியும்' என்று தாமோதரன் கெண்டை பண்ணியது உண்டு இவ்விஷயம் முதலாளி காதுவரை எட்டியிருந்தது. சிவசைலம் பொடிப்பயல் அவனைப் பொடிப் பொடியாக ஆக்கி ஆடிக்காற்றிலே தூவிவிடமாட்டேனா என்று கறுவிக் கொண்டிருந்தது தாமோதரனுக்கும் தெரியும். அன்பர் சிவசைலம் தான் வாழ உதவாமல் பிறர் மட்டும் சுகமாக வாழ்வதைக்கானச் சகியாதவர். தேவையுள்ளவனுக்குத்தான் பணம். நமக்குத் தேவை இருக்கிறது. தேவையில்லாமல் அளவுக்கதிகமாகச் சேர்த்த வைத்திருப்பவன் பணம் பெட்டியில் பூட்டிக் கிடப்பதை விட நமது தேவைக்குப் பயன்பட்டால் என்ன கெட்டுவிடப்போகிறது' என்ற உயர்ந்த கொள்கை உடையவர். அமெச்சூர் நாடகங்களில் அமோகமான பற்றுதலிலிருந்தது காதல் என்று சொல்லக் கூடிய அளவு பற்றுதல், சினிமா வந்த பிறகு அந்தக் காதல் சினிமா மீது காமமாக வளர்ந்துவிட்டது. * * : - • , சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற மோகம் ஆளையே மாற்றி விட்டது. வாழ்க்கையிலே நடிக்க ஆரம்பித்து விட்டார் அவர் அதை அவர் கலையாகச் செய்ததனால், தோழர் நடிப்பதை வாழ்வென்று மயங்கினார்கள் மற்றவர்கள். நிஜவாழ்வின் செயல்களை நடிப்பு என்று கருதினார்கள். அவர் சொல்லிலும் செயலிலும் எது நடிப்பு. எதெது வாழ்க்கை உண்மை என்று நிர்ணயிக்க முடியாமல் திணறித் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - ஆசாமியின் போக்கே இதுதான் என்று முடிவு கூறி. ... . . . . . . . . . . . ". . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/44&oldid=841408" இலிருந்து மீள்விக்கப்பட்டது