28 ☐ சேக்கிழார்
தேவன்’ என்று வழிபடப்பட்டான். காசியிலிருந்து இராமேச்வரம் வரை கோவில்கள் இருந்தன. இஃது உண்மையாயின், இத்தமிழகத்திலும் இராமேச்வரம் உட்படச் சில கோவில்களேனும் அப் பண்டைக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? காஞ்சி - ஏகாம்பரநாதர் கோவில், மதுரை - மீனாட்சியம்மன் கோவில் முதலியன எக்காலத்தில் உண்டாயின என்பது இன்று கூறக் கூடவில்லை.
சங்க காலக் கோவில்கள். சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழ கி.பி. 400 என்னலாம். அதன் தொடக்கம் கூறக்கூடவில்லை. இச்சங்க காலத்து மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பர். அதனைக் கொண்டு, வீரர் வணக்கத்துக்கு உரிய கோவில்களும் முருகன்-திருமால்-துர்க்கை முதலிய தெய்வங்கட்க்குக் கோவில்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகிக்கலாம். புறநானூறு முதலிய தொகை நூல்களில் சிவபெருமான் - முருகன் - துர்க்கை - திருமால் - பலராமன் முதலிய கடவுளர் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்பட்டுள்ளனர். அதனால் அவர்கட்குக் கோயில் உண்மையை அறியலாம். ஆலமா செல்வனான சிவபிரானுக்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேள் அளித்தனன் என்பதனால், கோவிலும் இலிங்கமும் (சிவனைக் குறிக்கும் மூலத்தான அடையாளம்) இருந்தன என்பது தெளிவு அன்றோ?
சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்தில் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார், இவர்க்குக் கோவில்கள் இருந்தன. சிவன் - முருகன் - திருமால் - பலராமன் இவர்கட்கும் கோவில்கள் இருந்தன என்பது.