34
☐
சேக்கிழார்
இக்கால அரசியல் நிலை. இப்பல்லவரது பரந்து பட்ட காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் முதற்பகுதி கி.பி. 400 முதல் 600 இரண்டாம் பகுதி 600 முதல் 900 வரை என்னலாம். முதற் பகுதியில் தமிழகம் களப்பிரர், பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டு அல்லற்பட்டது. காஞ்சி நகரம் பல்லவர் கைப்பட்டது. சோழ நாடும் பாண்டிய நாடும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. இந்நாடுகளை வென்ற முதல் களப்பிரன் அச்சுத விக்கந்தன் என்பவன். அவன் காலம் கி.பி. 550 என்று கூறப்படுகிறது. பாண்டியநாடு ஏறத்தாழ, கி.பி. 500இல் களிப்பிரர் ஆட்சியிலிருந்து விடுபட்டுப் பாண்டியர் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆயின், சோழ நாடு களப்பிரர் கையிலிருந்து பல்லவர் கைக்கு மாறிவிட்டது. அஃது ஏறத்தாழ, கி.பி. 600 முதல் 900 வரை பல்லவர் வசமே இருந்தது. சோழர் கும்ப கோணத்தை அடுத்த பழையாறை, திருவாரூர் முதலிய நகரங்களைத் தன்னகத்தே பெற்ற மிகச் சிறிய நிலப்பகுதியைச் சிற்றரசரர்க இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் வடக்கே பல்லவப் பேரரசுக்கும் தெற்கே பாண்டியப் பேரரசுக்கும் இடையில் இருந்து வாழ வேண்டியவர் ஆயினர். ஆயினும், பல்லவர் தம் நாட்டைக் கவர்ந்தனர். ஆதலாலும் தமிழகத்துக்கே புதியவர் ஆதலாலும் சோழர், அவர்கள் வலியை ஒடுக்கப் பாண்டியருடன் உறவுகொண்டு வாழ்ந்து வந்தனர். எனினும், பல்லவர் பகைமையை விரும்பாமல், அவர்கள் அரசியலில் உயர்ந்த அலுவலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தனர் போர்க் காலங்களில், சமயத்துக்கு ஏற்றபடி ஒருகால் பல்லவருடனும் பிறிதொருகால் பாண்டியருடனும் சேர்ந்து போரிட்டனர். கி.பி. 600-க்கு
2 History of Pali Literature, Vol. п, pp. 384, 385 & 389.