பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பல்கலைக்கழக வரலாற்றுச் சிறப்புடைய ஆசிரியராயிருந்து காலஞ் சென்ற திரு. எஸ். கே. கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள். அவர்கள் இந்நூல் வெளிவரும் இந்நாளில் இல்லாமை என் நெஞ்சை மிகவும் வருத்துகின்றது.

கையெழுத்து வடிவில் இருந்த காலத்து இவ்வரலாற்றைக் கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஊக்கம் கொள்வித்த என் பெரு நண்பர்களான திரு. டி. வி. சதாசிவப் பண்டாரத்தார், திரு. வித்துவான், க. வெள்ளைவாரணம் ஆகிய இருவரது நன்றியை என்றும் மறவேன். இதனை ஆர்வமோடு படித்து மதிப்புரைகள் வழங்கிய என் இனிய நண்பர்களான டாக்டர் திரு. எம். எஸ். வயிரணப் பிள்ளை அவர்களையும், டாக்டர் திரு. மா. இராசமாணிக்கனார் அவர்களையும் நன்றியுணரும் என் நெஞ்சம் ஒருபோதும் மறவாது.

பல்லாண்டுகளாய்ச் சுணங்கிக் கிடந்த இந்த வரலாற்று நூலை வெளியிட்டுதவும் கண்டனூர் சாந்தி நூலகத்தார் நன் முயற்சியினைத் தமிழகம் பெரிதும் ஆதரிக்கும் என்னும் துணிபுடையேன்.

“ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.”
ஒளவை. துரைசாமி.