உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 17

நிரம்பவும் டாம்பீகமான உடைகளை அணிந்து கொள்ளாமல் மாசற்ற துல்லியமான சாதாரண உடைகளை அணிந்ததே, அவனது இயற்கை அழகு ஆயிரமடங்கு சோபிக்கச் செய்தது. அந்த யெளவனப் புருஷன் மூன்று மயில் தூரத்திற்கு அப்பால் புரசைப்பாக்கத்திலிருந்த தனது ஜாகைக்குப் போகவேண்டியவன் ஆகையாலும், அன்றையதினம், அவன் சைனா பஜார் தெருவிற்குப் போய்த் தனக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு போகவேண்டியிருந்ததாலும், அவன் தனது சட்டைப்பைக்குள்ளிருந்த கடிகாரத்தைப் பார்த்தவண்ணம் சென்றான். அவனது வலப்புரத்தில் கண்கண்ட தூரம் வரையில் பரவிக்கிடந்த கடலின் வனப்பையும், இடது பக்கத்திலிருந்த பூஞ் சோலைகளின் வனப்பையும் நோக்கி நோக்கி இன்புற்றவ னாகவும், கடற்கரையிலிருந்து ஜிலு ஜிலென்று வீசிய இனிய மந்த மாருதத்தில் தனது மனத்தையும் தேகத்தையும் லயிக்க விட்டவனாகவும், மெய்ம் மறந்து ஆநந்த சாகரத்தில் மிதந்து சென்று கொண்டிருந்தான். அந்த இடத்தில் அப்போதைக் கப்போது மோட்டார் வண்டியும் ஸாரட்டு வண்டியும், குதிரை வண்டியும் அவனுக்கு எதிர்புறத்திலிருந்தும் பின்புறத்திலிருந்தும் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த ராஜபாட்டை நிரம்பவும் விசாலமாக அமைக்கப்பட்டிருந்ததன்றி, அதன்மேல் கிழக்கு ஒரமாக கால்நடைப் பிரயாணிகளின் உபயோகத்தின்பொருட்டு முக்கால் அடி உயரத்தில் குறடு கட்டி விடப்பட்டிருந்தது. அந்தக் குறட்டின்மீதேறி வடக்கு திக்கில் நடந்தவண்ணம் இருந்த நமது யெளவனப்புருஷன், பின்புறத்திலிருந்து குறட்டின் ஒரமாக வந்துகொண்டிருந்த ஒரு வண்டியின் ஓசையைக் கேட்டு பின்புறம் திரும்பி நோக்கினான். அப்போது தனக்குப் பின்னால் பத்துகஜ தூரத்தில் ஒரு ஸாரட்டு வண்டியில் தனக்குத்தெரிந்த சிலர் வந்ததைக் கண்டு அந்த யெளவனப்புருஷன் ஒருவித லஜ்ஜையும் இன்பமும் அடைந்தவனாய்த் தத்தளிக்கலானான். அவர்களைக் கண்டு அவன் மிகுந்த கிலேசமும் நாணமும் அடைந்து வருந்துகிறான் என்பதை அவனது உடம்பின் தடுமாற்றமே நன்றாக வெளிப்படுத்திவிட்டது. அவர்களைப் பார்ப்பதும், முகத்தை அப்புறம் இப்புறம் திருப்புவதுமாக மிகுந்த சஞ்சலமும் இன்பமும் அடைந்து, நமது சுந்தரபுருஷன் நடந்துகொண்டிருக்க, அடுத்த நிமிஷத்தில், அந்த ஸாரட்டு வண்டி அவனுக்கு அருகாகவே வந்து முன்னால் சென்றது. செ.கோ.!-3