உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பற்றியும் (பக். 74) - இவைபோன்ற பிற மூட நம்பிக்கை களையும் சாடுகிருர், இவர் நூல்களில் சங்க இலக்கிய வாடை வீசுவதைக் காணமுடியும். பெற்ற மகளுக்குத் தாய் வீடு இனிமை தராது என்பதும், கணவைெடு கலந்து வாழும் தனி வாழ்வே சிறந்ததென்பதும் தாயின் கொடுமையிலும் கணவைெடு கடக்கும் வெஞ்சுரம் இனிமை வாய்ந்த தென்பதும் சங்க இலக்கியங்கள் தரும் விளக் கங்கள். இவற்றை இவர்தம் செந்தாமரையில் காட்டுவது எண்ணத் தக்கது. "குளிர்ந்த பொய்கையைவிட்டு நீரற்ற பாலை வனத்தை யார் விரும்புவார்கள்? பெற்றேரின் வீடு, வளர்ந்த மக்களுக்குப் பாலைவனம்தான். ஆணுக இருந்தாலும் பெண்ணுக இருந்தாலும் பெற்றேரின் வீடு பாலைவனந்தான். பெற்றேர்கள் எவ்வளவோ அன்பு காட்டலாம். எத்தனை நெல்லிமரங்கள் இருந் தானும் என்ன? பாலைவனத்தில் உயிர் போகாமல் காப்பாற்றலாம்; அவ்வளவுதான். வாழ்க்கையை வளம்படுத்த முடியாது." (செந். பக். 143). இதில் மு. வ. அவர்கள் பெண்களை மட்டுமின்றி ஆண்களை யும் பிணைக்கிருர். மணமான ஆணும் பெண்ணும் தனித்து வாழ்தலே சிறப்புடைத்து என்பது இவர் கொள்கை. என வேதான் பெண்னெடு ஆணையும் பிணைக்கிறர். மேலும் இவருக்கு இனிய மரங்களின் மேற்கோள் இங்கும் எடுத் தாளப் பெறுகிறது. ஆம்! நெல்லிமரம் உயிர் வளர்க்கும் வாழ்க்கையை வளம்படுத்துமா?’ எனக் கேட்கிருர். சங்க இலக்கியங்களை வெளிப்படையாகவே தொட்டுக்காட்டும் இடங்கள் பல. அவற்றைப் பின்பு காண்போம். தான் முதலில் பார்த்த கிளார்க் வேலையை விட்டு ஆசிரியர் வேலைக்கு வந்த காரணத்தையும் இளங்கோ' என்னும் பாத்திரத்தின் வாயிலாக விளக்குகிறர்.