உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 'பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்குமுன் நிற்க முடியாதவை என்பதை உணர்ந் தேன். தவிர அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என் னைக் கவர்ந்தது." (அகல். 119 - மு. வ. பெற்ற சென்னை யின் முதல் அனுபவம்). 'நாம் உழைக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற கூலி வரவேண்டும். இப்படி எதிர்பார்ப்பதுதான் கடமை. அதை விட்டு எதிர்பாராமல் பணம் வந்து குவியவேண்டும் என்று ஏங்குவதே பாவம்." (அகல். பக். 217). "ஐம்பது ரூபாய் வருவாய் உள்ளவர் ஐந்நூறு ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா? அவர் ஐயா யிரம் ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா?" (அகல். பக். 297). 'ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக் கால் ஆடு இருந்தால் போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரிலிட்டு வதைத்துக் கொல்ல வேண் டும்." (அகல். பக். 310). கடமை எனக்கொண்டார் இதுவரையில் டாக்டர் மு.வ. அவர்கள்,தம் நாவல்கள் ஒரு சிலவற்றில் எடுத்துக் காட்டும் சில மக்களைப் பற்றிச் சுட்டிய சில கருத்துக்களைத் தொட்டுக் காட்டினேன். நான் காட்டிய நூல்களிலேயே இன்னும் இத்தகைய கருத் துக்கள் பலப்பல உள்ளன. காட்டாத நூல்களுள் இன் னும் பல. இக்கருத்துக்களுள் பல இவர்தம் வாழ்வோடு, ஊரோடு, உற்ருரோடு, வீட்டோடு, மனைமக்களோடு, மற்றவரோடு தொடர்பு உடையனவே. இவை அனைத்தும் இவர்கண்ட, கொண்ட வாழ்க்கை நெறியின் நிழலாடி களே. புத்திலக்கியமாகிய நாவல்களைப் படைத்த அறிஞர் மு. வ. அவர்கள் நான் முதலில் காட்டியபடியே தம் சூழ