உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

15

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

நான் இல்லாதபோது யாராவது குதிரைகளுக்குத் தீனி வைக்க வேண்டுமே’ என்று சொன்னான்.

‘அதை நான் கவனித்துக் கொள்கிறேன், நிகிட்டா. நான் சைமனிடம் சொல்லி வைக்கிறேன்’ என்றாள் அவள்.

ஆகவே, தீர்மானமான ஒரு முடிவை எதிர்பார்த்தபடி ‘என்ன வாஸிலி ஆன்ட்ரீவிச், நானும் உங்கள்கூட வரவா?’ என்று நிகிட்டா கேட்டான்.

‘என் வீட்டுக்காரியை நான் திருப்திப்படுத்த வேணும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நீ வருவதென்றால், இதைவிடக் கதகதப்பான உடுப்பு ஏதாவது அணிந்து கொள்வது நல்லது’ என்று சொல்லி, வாஸிலி. நிகிட்டாவின் மேல் அங்கியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே புன்முறுவல் பூத்தான்.

நிகிட்டா அணிந்திருந்த ஆட்டுத்தோல் சட்டை கட்டையாக இருந்தது. கைகளின் கீழும் முதுகுப் புறத்திலும் கிழிந்து காணப்பட்டது. அழுக்குப்படிந்து, ஓரம் பூராவும் சிலும்பல் சிலும்பலாகி, உருக்குலைந்து போய்விட்டது அது. அதனுடைய ஆயுட்காலத்தில் அது எவ்வளவோ அடிபாடுகளைத் தாங்கிச் சகித்து வந்திருந்தது.

‘ஏய், ஐயா, இப்படி வந்து இந்தக் குதிரையைக் கொஞ்சம் பிடித்துக்கொள்’ என்று நிகிட்டா சமையல்காரியின் கணவனைப் பார்த்துக் கூவினான். அந்த ஆள் இன்னும் முற்றத்திலேயேதான் நின்றான்.

‘வேண்டாம். நானே பிடிப்பேன். நான் தான் பிடிப்பேன்’ என்று கத்திக்கொண்டு சின்னப்பையன்