13 பட்டன. ஹைதர் கலாபுக்குப் பிறகு, துளஜா தம் காலத்தில் பாவா பண்டிதர் என்ற தன் அமைச்சரைக் கொண்டு சில திருத்தங்கள் செய்வித்தார். ஹைதர் கலாபத்தால் அழிவுள்ள ஊர்களோடு செழிப்பான ஊர்கள் சேர்க்கப்பட்டன. அவற்றுக்குப் 'பத்தக்கம்' என்று பெயரிடப்பெற்றன. அவற்றைப் "பத்தக்தார்" என்பவர் மேற்பார்வை செய்தனர். அவர் தம் கீழுள்ள ஊர்களின் விளைவை மேற்பார்வை செய்தனர். இங்ங்னம் மாற்றியமைத்தது தொடக்கத்தில் சிறப் பாகவே அமைந்தது என்று சொல்லப்படுகிறது. பின்னர் அவை ஒன்பது தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டன். இதனை, " பேஸஜி காலத்தில் இருந்த தாலுகா - திருவாதி, கும்பகோணம், மாயவரம், பாபநாசம், திருவாரூர், நன்னிலம், கீவளூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை ' என்ற குறிப்பால் அறியலாம். மேற்குறித்த 9 தாலுகாக்களுடன் கேமல் என்ற கலெக்டர் வந்ததும், கொடவாசல், வலங்கிமான், குத்தாலம், சீயாழி, பேரளம், திருத்துறைப்பூண்டி, என்ற 6 தாலுகாக்கள் ஏற்படுத்தப்பட்டன." - இவை மூன்று " டிவிஷன்களாக ” ப் பிரிக்கப்பட்டன : முதல் பிரிவில் 9 தாலுகாக்கள் " பிரின்ஸிபல் கலெக்டர் " விசாரணையிலும் மற்ற ஆறையும் 2 டிவிஷன்களாக்கி உதவி கலெக்டர் (?) விசாரணையிலும் அமைக்கப்பெற்றன. இவர்கள் நாட்டில் பல இடங்களில் கோட்டைகள் இருந்தன, அவை : சாஹக்கோட்டை, பந்தநல்லூர், மகாதேவபட்டணம், பெரம்பந்திதர் (?), அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி என்பனவாம்." ஒவ்வொரு கோட்டைக்கும் தலைவர் உண்டு அவருக்குக் கில்லேதார் என்று பெயர். 1. P. 322, Maratha Rule in the Carnatic - Srinivasan, C.K. &. in Gudr. o. 20–16. 2. 1771 சுபா கும்பகோணம் பதக்-தாராசுரம் (8-144) என்றமை காண்க, 3, 1–68 4, 1–64 5. 6-6, 7,
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/23
Appearance