17 மனைவியர் : இவருக்குத் தீபாபாய், அண்ணுபாய் என்று இரு மனைவியர் இருந்தனர் எனப் போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும்". எனினும், 1776 கைலாஸ்வாலி ஏகோஜி ராஜா சம்சாரம் கங்காபாய் பரலோகம் அடைந்ததற்கு உத்தரகிரியைக்கு 50 சக்கரம்” என்ற குறிப்பால்" ஏகோஜிக் குக் கங்காபாய் என்ற ஒரு மனைவி இருந்தமை பெறப்படும். இவருக்கு அபிமானத்தினால் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவிகள் ஒன்பது பேர் " என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறுவதால் கங்காபாய் அத்தகைய மனைவியருள் ஒருவராதல் கூடும் எனக்கொள்ளலாம். முதலாம் ஏகோஜி 1682இல் இறந்தார் என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும்." ஆனால் கங்காபாய் 1776இல் இறந்தார் எனின் ஏகோஜிக்குப் பிறகு 94 ஆண்டுகள் அவ்வம்மையார் உயிர் வாழ்ந்தார் என்று கொள்ளப்பட்டு ஏறத்தாழ 110 ஆண்டுகட்கு மேல் உயிர்வாழ்ந்தார் என்று கொள்ள நேரிடும். உண்மை புலப்படுத்தற்கு வேறு சான் றில்லை. சிவாஜியைக் கண்டமை; ஏகோஜி திருமழபாடியில் சிவாஜியைக் கண்ட செய்தி சிவாஜி வெங்காஜிக்கு எழுதிய கடிதங்கள் என்ற தலைப்பில் (5) விரிவாகக் கூறப்படும். வரலாற்றாசிரியர்கள் எகோஜி கட்டுமரத்தினைக் கொண்டு கொள்ளிடத்தைக் கடந்தார் என்று கூறியிருக்க மோடி தமிழாக்கம், அவ்விருவருடைய சந்திப்பை விவரித்து ஏகோஜியைப் பாபாஜி பவார்' என்பார் தன் முதுகில் தூக்கிக்கொண்டு இரவில் 12 மணிக்குக் கடந்தார் என்று அதிகப் படியான செய்தியைக் கூறுகிறது. சில வரலாற்றாசிரியர்கள் திருவதி' யில் இருவரும் சந்தித்தனர் என்று கூறியிருக்க, மோடி தமிழாக்கம் திருமழபாடி யென்றே வலியுறுத்துகிறது." ஏ கோஜி தஞ்சை அரசரான மை : இதுபற்றி இரு வேறு கருத் துக்கள் உண்டு. தஞ்சையை வலியப் பற்றினார் என்பதொரு கருத்து. பிறிதொன்று நாயக்கமன்னர் பீஜப்பூர் சுல்தானின் உதவியைவேண்டியபொழுது அச்சுல்தான் ஏவியதால் வந்தார் என்பது பிறிதொன்று. பீஜப்பூரிலிருந்து ஏகோஜி வந்தார் என்று பின்வரும் பகுதியால்" அறியப்பெறும் : 1858 : ரா ஏகோஜி ராஜா சாகேப் பீஜப்பூரிலிருந்து இங்கு வந்த பொழுது அவ்விடம் உள்ள பாதுவடிாவின் உத்திரவுப்படி கார்கானா (அரசாங்கம்) நடத்துவதற்கு ஸேவகனுடைய முன்னோரை அவர்களுடன் அனுப்பினார்". 5. பக்கம் 79 6. 2-134 7. பக்கம் 79 8. பக்கம் 79 9. 3-105, 106; 7–671 10. 4–457, 458 11. பீஜப்பூரிலிருந்து ஏகோஜியுடன் வந்தவர்கள் காதர், கஸ்ாஸ்கான், அப்துல்ஹலீம் - பக்கம் 75, போன்ஸ்லே வம்ச சரித்திரம். 3
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/27
Appearance