பக்கம்:தமிழ் அங்காடி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28  தமிழ் அங்காடி


தற்பெருமை விரும்பாதவர், இவரது ஐம்பதாம் அகவை. பிறந்த நாளை மிகவும் ஆரவாரமாகக் கொண்டாட வேண்டும் என அறிஞர்கள் முயன்றபோது அதை விரும்பாமையால், அந்த நாளில் வேறு இடத்திற்குச் சென்று மறைந்து கொண்டார்.

மாணாக்கர்களுடனும் நண்பர்களுடனும் அறிஞர்களுடனும் குழந்தைபோல் பழகுவார். அவரவர்க்கு ஏற்படும் ஐயங்களை விளக்கித் தீர்ப்பார்.

கைம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் ஒரு சீர்திருத்தவாதி எனலாம். இதனால் தனக்குத் துணை தேடியதோடு ஒரு பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுத்ததாகவும் ஆகிறது.

இவர் போரை விரும்பாதவர் - அமைதியையே விரும்பு பவர். அணுகுண்டு செய்யப்பட்டதற்குத் தனது ஆய்வு மூலகாரணமாயிருந்தது என்பதை அறிந்து மிகவும் வருத்தப் பட்டார். அந்த அழிவு வேலைக்கு இவர் முதலில் உடன்படவே இல்லையாம்.

செல்வத்தை விரும்பாதவர். தாம் ஈட்டிய பொருளை அறச்செயல்கட்குப் பயன்படுத்தினார். வேலையில்லா தோர்க்குத் தம் செல்வாக்கினால் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். நோபெல் பரிசாகக் கிடைத்த காசோலையை (Cheque) பல நாட்கள் வரை பணமாக மாற்ற வில்லையாம். நூலுக்குள் அடையாளமாக வைத்திருந்தாராம்.

அவரது சார்புக் கொள்கையைப் புரிந்து கொள்வது கடினம். கேட்டவர்கட் கெல்லாம் அந்தக் கொள்கையை எளிய முறையில் விளக்கிப் புரிய வைப்பாராம். இவரது ஆராய்ச்சிக் கூடம் இவரது மூளையேதான். அதுதான் இவ்வளவும் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/30&oldid=1203073" இலிருந்து மீள்விக்கப்பட்டது