பக்கம்:தமிழ் இனம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

தமிழ் இனம்


" ..................
தோள்வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள்ளறி வுறீஇயின கொல்லோ ? தெள்ளிதில்
காதல் கெழுமிய நலத்தள்; ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்குந்
திதலை அல்குல் தேமொழி யாட்கே."

- நற்றின, 161.

என்று உள்ளத்தில் ஒருவராலும் உரைசெய்ய அரியதொரு காதற் பெருக்கால் வினவும் விளுவினை நோக்குங்கால், தலைவன் தலைவிபால் கொண் டொழும் தலையளி இன்ன தன்மைத்தென்பது இனிது விளங்கும். இருவரும் ஒருவரை ஒருவர் காதல்கூர் கண்ணுல் கவ்வ, அவ்வின்பப் பார்வையைக் கண்டு மகிழ்ந்து, முல்லை முறுவல் கொள்ளு வதை எவரே இல்லை என்பர் !

நெய்தல் நெகிழ்ச்சி

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். தலைவனது நீண்ட பிரிவால் தலைவிக்கேற்படும் மன நெகிழ்ச்சி நெய்தல் எனப்படும். பறவைகள் இல்லம் நோக்கித் திரைகடல் கடந்து மீள்வதையும் காலையில் சென்ற பரதவர் தம் தாளாண்மையாற் பெற்ற பொருளுடன் தத்தம் இல்லோர் மகிழக் கரைசேரும் காட்சியையும் காணும் தலைவிக்குத் தனிமையும், மதியும், கடலும், காரிருளும் பிறவும் கூற்றாய் அமைகின்றன. அவள் கணவனது நெடும் பிரிவால் நெகிழ்ச்சி அடைகின்றாள். அந் நெகிழ்ச்சியால், “என் இயற்கை அழகு கெட்டது : தோள்கள் அழகிழந்தன ; நெஞ்சம் துணுக்குறுகின்றது ; கண்கள் துயின்றில; முகமோ வெளுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/43&oldid=1507212" இலிருந்து மீள்விக்கப்பட்டது