பக்கம்:தமிழ் இனம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இனம்

11

களைச் செய்தல் இயல்பு. ஆயின், ஒவ்வொரு தொழிலைச் செய்வோரும் பிறவியிலே வேறுபட்ட சாதியினராகக் கருதப்படும் இழி நிலை பிற நாடுகளில் காணப்படாதது. ஆனால், இந்நாட்டில் தொழில் காரணமாக ஏற்பட்ட பெயர்கள் சாதிப் பெயர்களாக நிலை நிறுத்தப்பட்டன.

வட இந்தியாவில்

இந்நாட்டில் குடிபுகுந்த ஆரியர் சாதிப் பிரிவினை அறியாதவர். ரிக் வேத காலத்தில் அவர்களிடம் சாதிப் பிரிவுகள் இல்லை. ஆயின், பிற்பட்ட காலங்களில் அவர்கள் உயர்வு கருதிப் பிரிந்து வாழ்ந்தனர். கொடுக்கலும் வாங்கலும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பிராமணர், ஷத்திரியர், வைசியர் என்னும் முப் பிரிவினைகள் தோன்றின. அவர்களிடையே இருந்த பலவகைத் தொழிலாளர்கள் நான்காம் பிரிவினராயினர். நாளடைவில் ஆரியரால் ஆளப்பட்ட இந்நாட்டிற்குரிய மக்களும் சூத்திரராக்கப்பட்டனர்.

தமிழகத்துப் பிரிவுகள்

இங்ஙனம் வட இந்தியாவில் உண்டான சாதிப் பாகுபாடுகள் அதே காலத்தில் தென்னிந்தியாவில் காணப்படாதனவாக இருந்தன. தமிழகம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலங்களாகப் பிரிந்திருந்தது. குறிஞ்சி நிலத்து மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி, குறவன், கானவன் எனப் பெயர் பெற்றனர்; பாலை நில மக்கள் விடலை, காளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/8&oldid=1378652" இலிருந்து மீள்விக்கப்பட்டது