பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 9 தமிழ் முழக்கம் 0

தேங்கியுள காட்சியெலாஞ் செப்புந் திறனில்லை; நெஞ்சங் குளிர்ந்து நெடுவானில் அங்குமிங்கும் விஞ்சுங் களிப்பால் விளையாடி நான்பறந்தேன்; பாடிப் பறந்தேன் பசுமை வளமெல்லாம் கூடிக் கிடக்கின்ற கோலமெலாங் கண்டுணர்ந்தேன்; காட்சிஎலாங் கண்டு களிகூர நான்பறந்தேன்; மாட்சிமைசேர் என்னன்னை மற்றுஞ் சிலசொன்னாள்: 'நாட்டு வளமெல்லாம் நாடிச் சிறகடித்துப் பாட்டுப் பறவைஎனப் பண்பாடி வந்தனைநீ, 110 எண்ணிலடங்கா இயற்கை வளங்களெலாம் மண்ணில் இருந்தும் மனிதன் நிலைமட்டும் வற்றி வறண்டு வறுமை மிகவுற்றுச் சுற்றி யலைகின்றான் சோற்றுக் கழுகின்றான் ஏனென்றறிந்தாயா?" என்று வினவினள்தாய்; "நானொன்றறியேன் நவிலெனக்கு நீயென்றேன்; கையிருந்தும் காலிருந்தும் காடு கழனியெனச் செய்யிருந்தும் வேலையது செய்ய மனமின்றிச் சோம்பித் திரிகின்றான்; சோற்றுக் கவலையினால் தேம்பித் தவிக்கின்றான்; தீங்கின்றி வாழ 120 உழைப்பை மதிப்பதில்லை ஒய்ந்திருந்தே இங்குப் பிழைக்க விழைகின்றான் பேதைமையாற் சாகின்றான்; மண்ணிற் கிடந்து மடிகின்ற மாந்தனை நீ நண்ணி உணர்வூட்டு, நாளும் வலிவூட்டு, கண்ணைத் திறந்துவிடு, காலத்தை ஞாலத்தை எண்ணித் தொழில்புரிய ஏவிவிடு, மண்ணகத்தே வாழ்வாங்கு வாழ வழிமுறைகள் சொல்லிவிடு; தாழ்வாகி நிற்போர் தலைநிமிரச் செய்துவிடு: பாடும் பறவையெனப் பாடி வருபவனே." கூடும் உனக்கொன்று கூறுகிறேன் நெஞ்சிற்கொள்: 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/17&oldid=571625" இலிருந்து மீள்விக்கப்பட்டது