24
வல்லிக்கண்ணன்
அடிகளார் மரபும், ஒழுக்கம் பிறழாமையும், பட்டம் ஏற்றுச்செய்த பெரும்பணிகள் :
அடிகளார் ஐந்தாவது குரு மகா சந்நிதானமாகத் தமது பதினேழாவது வயதிலே பட்டம் ஏற்றார். சிவிகையூர்ந்து செல்லுதல் தான் அம்மடத்தின் மரபாகும். காலத்தின் அருமை கருதி கார் மூலம் பயணம் செய்யலாமே என்று பெரும்புலவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் கூறியபோது அடிகளார் அவர்கள், ஒரு சிறுகதையை உதாரணமாகக் கூறி ”யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றவே வந்தோம்; அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தால் பொய்யாது ஒழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தெளிவு படுத்தினாராம். சுவையான அந்த கதைப்பகுதி இந்நூலின் 19,20 பக்கங்களில் நூலாசிரியர் சுவைபட எழுதியுள்ளார். இதனால் சுவாமிகள் மடத்தில் தாம் ஏற்றுக்கொண்ட சந்நியாசி முறைக்குரிய உறுதிமொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும். வடதேசயாத்திரை - காசி கங்கை நீராடல் போன்றவைகளைக்கூட இதனால் தவிர்க்க வேண்டியதாயிற்று.
சுவாமிகள் பட்டமேற்ற காலத்தில் மடத்தின் பொருளாதார நிலை தாழ்வுற்றிருந்தது. பலவழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. நிலவருவாய் குறைவு. இவைகளையெல்லாம் முறையாகக் கவனித்து மடத்தின் சீடர்களான செல்வச்சீமான்களை வரவைழத்துப்பேசி, நிதிநிலைகளைஉயர்த்தினார் என்ற வரலாறும், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைப் போதிக்கும் வகையில் கல்விச் சாலைகளை நிறுவினார் என்ற வரலாறும், பசித்த ஏழை மாணவர்களுக்குத் தம் மடத்திலேயே உணவளித்து, இடமளித்து உதவினார்.
யாப்பிலக்கணப்புலமை-அறிவுப்பணி-தமிழ்ச்சங்கம்
சுவாமிகள் பாடல்களை இயற்றுவதிலும் பாடல் புனையும் கவிஞர்களைப் போற்றுவதிலும் சிறந்து விளங்கினார். நகைச்சுவையும்-இரட்டைப்பொருள் வசனமும் அவரோடு உரையாடுவோர்க்கு இன்பம் பயக்கும். ‘அறிவுடையார் எல்லாமுடையார்’, அறிவே சிவம் என்ற முதுமொழிகளுக் கிணங்க 1900 ஆம் ஆண்டு மதுரை திரு. பாண்டித்துரைத் தேவரவர்கள் நம்சுவாமிகளைச் சந்திக்க வந்த போது ‘‘தமிழின் தற்கால நிலை‘ என்ற தலைப்பில் அரிய