உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்கள் ஒருவனை தொல்லையிலிருந்து காப்பாற்றும் 45

கரைக்கு இழுத்தோம். துடுப்புகளைப் பதுக்கினுேம். அவற்றின் பூட்டுக்களே , டுத்துக் கொண்டோம். எங்கள் பின் நீந்தி வருவ தற்கு வகை செய்த கயிற்றிலிருந்து மீன்களைப் பறித்தோம். குன்றுகள் மீது நடந்து வீடு திரும்பினுேம், களைத்து, வெயிலில் காய்ந்து, ஒய்வும் பெற்று வந்தோம்.

நாங்கள் அங்கே சேர்ந்தபோது, மிஸ் லாட்டி வீட்டு முற்றத் தில் இருந்தாள். இரவு உணவுக்கு நாங்கள் வந்து சேரத் தாமதம் ஆகிவிட்டது என்பதால் அவள் கலக்கத்துடன் காணப்பட்டாள். எனக்கு என் அம்மாவிடமிருந்து ஏதோ ஒரு போன் செய்தி வந்ததாம். நான் வீட்டில் இருந்திருப்பின் அதற்குப் பதில் கூற நேர்ந்திருக்கும். நான் இல்லாமல் போனதால் அது அமைதியாகத் தீர்ந்து போயிற்று. நாங்கள் சீக்கிரமே சாப்பிட்டு விட்டோம். அதிகமாக ஒன்றுமில்லை. அந்நாட்களில் மத்தியான சாப்பாடு தான் பலமாக இருக்கும். இரவு வேளைக்குப் பன்றித் தொடையும், முட்டைகளும், வெள்ளைச் சோளமும் காப்பியும்தான். சிறிது கேக் இருந்தாலும் இருக்கலாம். நான் சாப்பிட்டு முடிப்பதற் குள்ளாகவே கொட்டாவி விடலானேன். உடனே தாத்தா பின் புறத் தோட்டத்தைச் சுட்டிக் காட்டினர்.

அந்த மீன்களைச் சுத்தம் செய், போ. எனக்கு வயது அதிக மாகி விட்டது. அதைச் செய்ய முடியாதபடி களைத்து விட்டேன். மீன்களைப் பிடிக்கிறவன், அல்லது பறவைகளைச் சுடுகிறவன், அவற்றைத் தின்பதற்குத் தகுதியானவையாக மாற்ற வேண்டிய தும் அவசியம். உாங்கப் போவதற்கு முன்பே இதைச் செய்துவிட வேண்டும். இல்லையேல் எல்லாம் பாழ்தான். பயன்படுத்த முடியாததை நீ எடுத்து வருவதும் பாபமேயாகும்’ என்றார்.

அத்தி மரத்தடியில் அமர்ந்து, மீன்களைச் சுத்தம் செய்வதற் குள் நான் தூங்கி விடுவேன் என்று தோன்றியது. அத்தனை மீன் களை அதுவரை நான் கண்டதேயில்லை நீரில் உள்ள எல்லா மீன் களையும் பிடித்து விட்டோம் என்று எண்ணினேன். இறுதியில் அவை அனைத்தையும் குடல் நீக்கி, செதிளுரித்து, ஒழுங்குபடுத்தி, உப்பு நீரில் கழுவி, ஐஸ் பெட்டியில் வைத்தேன். நான் படுக்கை நோக்கித் தள்ளாடிச் சென்றபோது, தாத்தா கூச்சலிட்டார்.

‘’ போய் குளி. உன் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. மீன் கடை மாதிரி ஒரேயடியாக நாறுகிறாய். அழகிய சுத்தமான படுக்கைத் துணிகளை மீன் நாறும்படி செய்தால் மிஸ் லாட்டி வெகு வாகக் கோபிப்பாள். அப்புறம் நாம் என்றுமே மீன் பிடிக்கப் போக முடியாது.” - - நான் போய் என் உடம்பைக் கழுவிவிட்டு, சோர்ந்து வந்து படுக்கையில் விழுந்தேன். என் கடைசி எண்ணம் இப்படி அமைந்தது : . நாம் மீன் பிடித்தது வேலையே அல்ல என்று தாத்தா சொன்னது சரி. ஆனால், அது அவருக்காகச் சொன்ன தாகும். என்னை எண்ணிச் செர்ன்னது அல்ல. என் வாழ்நாளில்