உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இருக்க வேண்டும் என்று கூறுவது திருவள்ளுவரின் கருத்துக்கு மாறுபட்டதாகும். இல்லறம் துறவறம் ஆகிய இரண்டினைத்தான் ஆசிரியர் வள்ளுவனார் தம் நூலில் கறியுள்ளார்.

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள குறட்பா :

"துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை .' அனைத்தையும் துறந்துவிட்டு, நோன்பு நோற்று: தவத்தினைச் செய்பவர்கள் துறவிகள் எனப்படுவர். அவர் களுக்குக் காலம் நேர்ந்தபொழுது, இல்லறத்தான் பணி விடைகள் செய்தல் வேண்டும். வறுமையுற்றவர்களைத் துவ்வாதவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எந்த ஆதரவும் இல்லாமல் தன்னிடத்தில் வந்து இறந்து போனவர் களுக்கு இல்லறத்தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும். இந்தக் குறட்பாவில், துறந்தார்கள்' என்பதற்குப் பெற்றோர்களாலும், உற்றால் உறவினர் களாலும் துறக்கப்பட்டவர் என்று விளக்கம் சொல்லுவது ஏற்க முடியாததாக இருக்கின்றது.

திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரம் சிறப்பாக அமைந்துள்ளது. அதாவது மற்றவர்கள் செய்த நன்மையினை மறக்காமல் இருக்கவேண்டும் என்பதாகும். நல்ல வாய்ப்பு வந்தபோது நன்மை செய்தவர்க்கு நாம் திருப்பி நன்மை செய்யவேண்டும் என்பதாகும்.

'நன்றி' என்ற சொல்லுக்கு நன்மை என்பது பொருளாகும். செய்ந்நன்றி' என்ற சொல்லுக்கு, செய்த தன்மை என்று பொருளாகும்.

மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் நன்மை செய் வதைக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். பெற்றோர் களைப் பேணுதல், மனைவி மக்களுக்கு நன்மை செய்தல், அறம் புரிதல் இன்னபிற செயல்கள் எல்லாம் ஒருவருடைய