உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

5. ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்பு

இந்திரனே சாலும் கரி. [ளார்கோமான்.

(ப.ரை) ஐந்து-மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஜந்தின் வழியில் ஐந்து ஆசைகளையும், அவித்தான் - அடக்கியவனது, ஆற்றல் - வலிமைக்கு, அகல் . அகன்ற, விசும்புளார் - வானத்திலுள்ளவர்களுடைய, கோமான் . தலைவனான, இந்திரனே * இந்திரனே, சாலும் - அமைந்து உணர்த்தும், கரி - சாட்சி (சான்று) ஆகும்.

(க. ரை) புலன்களில் செல்லுகின்ற ஐந்து ஆசைகளை பும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இத்திரனே சான்றாவான் (சாட்சியாவான்).

6. செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்குஅரிய செய்கலா தார்.

(ப. ரை) செயற்கு அரிய - செய்வதற்கு அருமையான வற்றை, செய்வார்-செய்பவர்கள், பெரியர்-பெரியோர்கள் ஆவார்கள், செயற்கு - செய்வதற்கு, அரிய - அருமையான செயல்களை, செய்கலாதார் செய்ய முடியாதவர்கள், ! சிறியர் - சிறியோர்களாவார்கள்.

(கரை) செய்தற்கு அருமையான செயல்களைச் செய்பவர்கள் பெரியோர்கள் ஆவார்கள், செய்வதற்கு. அரிய செயல்களைச் செய்ய மாட்டாமல் எளியவற்றைசி' செய்பவர்கள் சிறியோர்களாவார்கள்.

7. சுவைஒளிமாறு ஓசை காற்றம் என்றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

(ப-ரை) சுவை . சுவைத்தலும், ஒளி . ஒளியும், ஊறு தீண்டுதலும், ஒசை - ஒசையும், நாற்றம் - மணமும், என்று என்று வரையறுக்கப்பட்ட , ஐந்தின் வகை .