உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20வார்ப்புரு:Rightதிருவெம்பாவை விளக்கம்

பிறிதொரு கருத்தாகும். அடியவர்களது பத்துச் செயல்கள் வெண்ணிறு, உருத்திராக்கம் அணிதல், ஆசாரியனுக்கு வழிபாடாற்றுதல், சிவனைப் பாடுதல், சிவன் திருப் பெயர்களை ஒதுதல், சிவனுக்கு வழிபாடு செய்தல், சிவ தருமங்கள் ஆற்றுதல், சிவ கதை கேட்டல், சிவால யத்தைப் பாதுகாத்தல், தொண்டர்களிடத்தில்தான் உண்ணுதல், தொண்டருக்குத் தொண்டராயிருத்தல் முதலியன என்பர்.

எனவே, மனம் தூயராய் இருப்பவர் சிவ பரம் பொருளை மனத்தினால் நினைத்து, வாயினால் பாடிப் பரவுவர் என்பது 'சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்னும் முத்தான தொடரால் சத்தாகப் பெற்ற வாறு காண்க .

<Poem|>முத்தன்ன வெண்ணகையாய்!

முன்வங் தெதிர்எழுந்தென்

அத்தன்,'ஆனந்தன்

அமுதன்என் றள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய்

வந்துன் கடைதிறவாய்!

பத்துடையீர்! ஈசன்

பழவடியிர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த்
தாட்கொண்டாற் பொல்லாதோ?

எத்தோ?நின் அன்புடைமை

எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார்

பாடாரோ? நம்சிவனை

இத்தனையும் வேண்டும்

எமக்கேலோர் எம்பாவாய்!<poem|>