உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 27

மயிர்ச்சாந்தினை அணிந்த கருத்த கூந்தலையுடைய பெண்ணே என்று விளித்துக் கன்னியர், இன்னும் எழுந்து வாrாத நிலையில் உள்ள கன்னியரோடு உரையாட மிங்கும் போக்கில் இப்பாட்டு அமைந்துள்ளது.

கூந்தலுக்கு அழகு அதன் நீளம், கருமை நிறம், அதன் மணல் வார்ந்தன்ன நெய்ப்பு நிலை, மணம் வரும் போக்கு முதலியனவாம். நறுமணமும் கருமையும் கொண்டு மயிர்ச் சாந்து பூசப்பெற்று அக்கன்னியரின் கூந்தல் திகழ்கிறது. ஆனால் அவர்களுக்கு இன்னும் விழிப்பு வரவில்லை, எனவே அவர்களுக்குச் சிவனின் அருமை பெருமைகளை உணர்த்தும் நோக்கில் இப்பாடல் அமைந்துள்ளது.

ஒருமுறை ஒரு போட்டி ஏற்பட்டது, சிவனுடைய நிருவடியையும் திருமுடியையும் காண முடியுமா? என்று. போட்டியில் ஈடுபட்டவர் இருவர். அவ்விரு வரும் எளிய வர்கள் அல்லர். மும்மூர்த்திகளில் இருவர். ஒருவர் படைத்தல் தொழில் செய்யும் பிரம்மன்; பிறிதொருவர் காத்தல் தொழில் செய்யும் திருமால். திருமால் பன்றி வடிவந்தாங்கி நிலத்தைக் கீண்டி அகழ்ந்து சென்று சிவனுடைய திருவடி கிடைக்குமா? என்று பார்த்தார்; கிடைக்கவில்லை. நான்முகனோ அன்னப்பறவை வடிவு கொண்டு பறந்து சென்று சிவனது திருமுடியைக் காணும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சியிலும் வெற்றி வந்தெய்தவில்லை. சிவபெருமான் அண்ணாமலையாக - சோதிப் பிழம்பாக நின்றார். மலையாக வெளிப்பட்டு மின்றும் இருவரும் அறிந்திலர். இது நிகழ்ந்தது திருவண்ணாமலை என்பர். அடிகள் திருவெம்பாவை பாடியதும் திருவண்ணாமலைத் திருத்தலமேயாதலால் அடிமுடி அறியவொண்ணாத ஆண்டவன் சோதிப் பிழம் பாய்க் காட்சி தரும் திருவண்ணாமலை பற்றிய புராணக் குறிப்பொன்றனை ஈண்டுப் பொருத்தமுறப் புகன்றன ாதல் வேண்டும். இதனையே மாலறியா நான்முகனும் காணா மலை’ என்றார் மணிவாசகர்.