உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனே?

அடுத்த வீட்டிற்குப் போகிரு.ர்கள், அங்கே உள்ள பெண் விழித்துக் கொண்டாலும் கண்ணே மூடிக் கொண் டிருக்கிருள் வருகிறவர்கள் தன்னை எழுப்புவார்கள், ஏதாவது பேசுவார்கள் என்று எண்ணிச் சற்றே புன்னகை பூக்கிருள். அதைக் கண்ட தலைவி, 'முத்துப் போன்ற வெள்ளே நகையையுடைய பெண்ணே என்று அழைக்கிருள்.

முத்து அன்ன இன்ங்கையாய் , - "முன்னே எல்லாம் எங்களுக்கு வந்து எதிரில் நின்று,ஆண்டவனே, எங்கள் தலைவன். எங்களுக்கு ஆனந்தத் தைத் தருபவன்' என்றும், தெவிட்டா அமுது போன்றவன்’ என்றும் வாய் எல்லாம் அள்ளுறும்படித் தித்திக்கப் பேசுவாயே! இப்போது வந்து உன்னுடைய வாசற் கதவைத்திறப்பாயாக’ என்கிருள். அள்ளுறுவது படுத்திருப் பவள் செயல். தித்திப்பது கேட்பவர் செயல். - முத்துஅன்ன வெள்கையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன் அத்தன்.ஆனங்தன், அமுதன் என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய், வக்துடன் கடைதிறனாய். அத்தன் என்பது தலைவன் என்ற பொருளை உடையது. ஆனந்தன் - ஆனந்தமயமாக இருக்கிறவன்; தன்னே வாழ்தது பவர்களுக்கு ஆனந்தம் தருபவன். அமுதன் - தன்னேத் கொழுபவர்களுக்கு மீண்டும் பிறவாத அமுத நிலையைத் தருபவன். - -

இவ்வாறு பேசிய பெண்ணுக்குப் பதிலாகப் படுத் திருக்கிறவள் சொல்கிருள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/17&oldid=579210" இலிருந்து மீள்விக்கப்பட்டது