உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் ஊறு தேன்வாய்ப் படி l 23

ஒருமுறை சிவனே என்று சொன்னலே நீ எழுவாயே; அப்படி எழவில்லையே! இரண்டாவது முறை சிவனே என்று சொன்ன போதும் அதன் பொருளை நீ உணரவில்லையே! கோலம் பாடிச் சிவனே என்ருேம். சிலம்பாடிச் சிவனே என்ருேம்.” கோலமும் நம்மை.ஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண்.

'நீ உலக வாசனையை இன்னும் முற்றும் விட்டு விடவில்லை. உன்னுடைய குழல் இனிய மணம் பொருந்திய பொருளோடு இருக்கிறது’’

ஏலக்குமலி, பரிசு ஏலோர் எம்பாவாய். ஏலக்குழல்-மணமுடைய பொருள்கள் பொருந்திய கூந்தல். உபலட்சணத்தால் மற்ற அலங்காரங்களையும் கொள்க. "அந்தத் தொடர்பினுல் இப்படி உறங்குகிருயோ? உன்னுடைய தன்மை இருக்கிறவாறு இதுவோ?’ என்று சொல்கிருள். இந்தப் பாட்டில் மால் என்பதற்கு மயக்கம் என்ற பொருள் உண்டு. அந்தப் பொருளைச் சுட்டும் படி ‘மால் அறியா’ என்று சொன்னுள். நான்முகனும் காணு" என்பது நான்முகனுக்கு எட்டுக்கண் இருந்தும் கான முடியாதவனுக இருக்கிறவன் என்பதையும் உணர்த்துவ தோடு, அவன் பிறரால் அறிந்து கொள்ள முடியாதவன் என்ற சிறப்பும் தோன்றுகிறது.

நாம் போல் அறிவோம்

என்றது அகங்காரத்தைக் காட்டியது. யாம் என்று சொல்லி யிருந்தால் அனைவரையும் சேர்த்துச் சொல்லியது ஆகும். அப்படித் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் சேர்த்துச் சொல்லாது, "நாம் போல் அறிவோம்’ என்று அகங்காரத் தோடு சொல்கிருள்."நாமாக்கும் அறிவோம்’ என்ற வழக்குப் போன்றது. இது. அப்படிச் சொன்னவள் அவள் வருவதற்கு முன்னே எழுந்திருந்து, அவர்களோடு சேர்ந்து போவதற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/24&oldid=579217" இலிருந்து மீள்விக்கப்பட்டது