உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் துயிலுதியோ? 31

உலகங்களில் உள்ளவர்களும் அறிவதற்கு அரியவன் அல்லவா?

வானே நிலனே பிறவே அறிவரியான்.

"நாம் முயன்று அவனுடைய அருளைப் பெறுவது என்பது அரிய காரியம். அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும் அவனே வந்து நமக்குத் தம் சிறந்த அருளைத் தந்து ஆட்கொண்டருளுவான். அத்தகைய எங்கள் பெருமானின் பெருமை பொருந்திய நீண்ட திருப்பாதங் களைப் பாடி வந்திருக்கிருேம். வந்து உன்னை எழுப்புகிருேம். எங்களுடைய வார்த்தைக்கு நீ உன் வாயிலைத் திறப்பாயாக'

தானே வந்து எம்மைத் தலையளித்து.ஆட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குஉன் வாய்திறவாய்

நாங்கள் அவனைப் பாடும்போது எங்கள் ஊன் எல்லாம் உருகுகின்றனவே. நீ உருகாமல் இருக்கிருயே. இது உனக்குத் தகுமா? நாங்கள் எங்களுக்குத் தலைவகை இருக்கிறவனேப் பாடுகிருேம். ' எங்களுக்கும், உன்னைப் போன்ற மற்றவர் களுக்கும் உரிய தலைவனுகிய கிவபெருமானைப் பாடுகிருேமே, நீயும் வந்து பாடு’ என்று சொல்கிருள்.

ஊனே உருகாய்; உனக்கே உறும்எமக்கும் ஏளுேர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய்.

"நாங்கள் எல்லாம் உருக உருகப் பாடுகிருேமே. நீ உருகாமல் படுத்திருக்கிருயே. அவன் எங்களுக்கு மாத்திரமா தலைவன்? எங்களுக்கும் எம் போன்ற மற்றவர்களுக்கும் உரிய தலைவன் அல்லவா? அவனை எங்களோடு வந்து பாடுவாயாக’ என்கிருள். . .

மானே நீ நென்னலை நாளவந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் காணுமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்ருே

வானே கிலனே பிறவே அறிவரியான் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/32&oldid=579225" இலிருந்து மீள்விக்கப்பட்டது