உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஏது அவனப்பாடும் பரிசு

ஆண்டவன் பெருமையைச் சொல்லத் தொடங்கு கிருர்கள். முதலில் அவனது பாதத்தைச் சொல்கிரு.ர்கள். இறைவனைத் தரிசிக்கும்போது அவனது திருவடியைத் தரிசிப்பதுதான் முறை. -

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழில்மடவாள் கூறுஉடையாள் ஒருபாகம் விரவுவார் மெய்அன்பின் அடியார்கள் மேன்மேல்உன் அரவுவார் கழல்இணைகள் காண்பாரோ அரியானே?

என மணிவாசகர் பிறிதோரிடத்தில் பாடுகிரு.ர். இறைவ னுடைய திருவடியை முதலில் கண்டு ஈடுபட்டு, பிறகு அவனது திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இறைவனைச் சொல்லும்போது

மதனுடை. நோன்தாள் -

என்று முதலில் இறைவனது இருவடியை எடுத்துச் சொல் கிருர், . -

இறைவனுடைய பாதமாகிய தாமரை மலர் ஏழு பாதாளங்களுக்கும் கீழே இருக்கிறது. அதாவது அதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாகத் தாங்கி நிற்பது. நம் , முடைய அறிவுக்கும் கண்ணுக்கும் எட்டாத அதைப்பற்றிச் சொல்வோமானுல் நம்முடைய சொற்கள் நழுவிவிடும். ஆகையால், . . ' ... . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/50&oldid=579243" இலிருந்து மீள்விக்கப்பட்டது