ரா. இராகவையங்கார் 29 10. ll. 10. நிலம்வ ளர்ந்த பேறிதேயென் னிலைவ ளர்ந்த தில்லைதேர் குலம்வ ளர்ந்த வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. பகைம லிந்து பவமலிந்து படர்ம லிந்து நரகமே மிகம லிந்து நகை விளைந்த வினைய விந்துன் னடைவனோ தகைம லிந்த முநிவர் வந்து தவமு யன்று நினையுறக் குகைம லிந்த வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதிாய. கன்றெ டுத்து விளவெறிந்த கண்ண நின்பெ யர்க்கணத் தொன்றெ டுத்து மொழிகிலாது சென்றெ டுக்குஞ் செனனநின் றென்றெ டுப்பை யென்றிருப்ப லின்றெ டுத்தல் பொறைகொலோ குன்றெ டுத்த வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. முடிம லர்ந்த தொடையலோடு முகம லர்ந்த தெரியலும் படிம லர்ந்த கோதைசூட வகம லர்ந்த பரமநின் --- _ மதி - அறிவு: சஞ்சலம் - மனத்துயரம்: சமம் - ஒத்த நிலை. பவம் - பிறப்பு: மலிந்து - மிகுந்து: படர்- துன்பம்: விளவு - விளாமரம்; கணம் - கூட்டம்: திரள்: செனனம் - பிறப்பு, எ - காத்தல்; பொறை - பாரம்; குன்று - மலை, கோவர்த்தன மலை.
பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/32
Appearance