உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2 திருவேங்கட மாயோன் மாலை இந்தப் பிறவி கிடைத்தது புண்ணிய மென்னுளனோ வறியேன் எங்குந் திருவருள் பெற்றவரின்ப மெனக்கு முண்டாவதுவே. சுந்தரத் தோளுடையார் திருமாலிருஞ் சோலைமலைச் சார ற் - றுங்கச் சிகரியிற் பொங்கித் தரளஞ் சொரியும் சிலம்பாற்றின் சந்தனத்தின் மணமுந்துளவுங் கமழ் தண்புனற்கண் முழுகுஞ் சன்மம் படைத்தவர் தன்மம் படைத்தவர் சன்மங் கிடைத்திலரே. * வேறு துருவற்கு நிழலைச்செய் வனவெற்பின் வளர்வுற்ற சுடரொத்து நிலைநிற்கு மகிலேசன் *சுவைமிக்க புதுவைப் பெண்புனைவுற்ற (தொடையற்குஞ் சுருதிக்குந் தனைமுற்றுந் தருமாயன் பொருவற்ற மலயத்து வசனுக்கின் னருள்வைத்த புகழ்தக்க திருவுக்குந் திருவானோன் புதுமைச்செம் பதுமப் பொற்பதம் விட்டுப் (புகுதற்குப் புவியிற்கு ளெதுமற்று மறியேனே. சோமச் சந்த விமானம்-அழகர் வீற்றிருக்கும் கர்ப்பக் கிருகத்தின் மேலுள்ள தூபி, சென்னி - தலை; துங்கம் - விளக்கம்; தரளம் - முத்து. சிலம்பாறு - அழகர் மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு; தன்மம் - தருமம். --- துருவன் - அழிவில்லாதவன்; வெற்பு - மலை; சுடர்சூரியன்; அகிலேசன் எல்லா உலகிற்கும் இறைவன்; புதுவைப் பெண் - பூரீவில்லிபுத்துாரில் அவதரித்த பூர் ஆண்டாள்; தொடையல் - பாமாலை; மலையத் துவசன் - மலையத்துவச பாண்டியன்: பதுமம் - - தாமரை.