பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 9

நினைவலைகள்

உவமைக்கவிஞர் சுரதா அவர்கள்

பேராசிரியர் கல்கி அவர்களால் விந்தன் என்று பெயர் மாற்றப்பட்டு, 'கல்கி இதழில் புரட்சிகரமான கதைகள் எழுதிய புரட்சி எழுத்தாளர் விந்தன் எனது இளமைக்கால நண்பர்.

விந்தன் வாழ்ந்த காலத்தில் எங்களுக்குள் இருந்த நட்பை, நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1949இல் சுயமரியாதை மிக்க திரைப்பட நட்சத்திரம் திரு பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்த 'மங்கையர்க்கரசி என்ற படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த என்னிடம், பதினான்கு வயதுடைய சிறுமி ஒருத்தி, 'அய்யா! இந்தப் பத்திரிகையில் சிறுகதை ஒன்று வந்திருக்கிறது. அதைப்படித்த நான் மிகவும் மனம் அதிர்ந்து போனேன்" என்றார்.

'மாட்டுத் தொழுவம்' என்ற அக் கதையை

எழுதியவர் விந்தன் என்பவர். வெளியிட்ட பத்திரிகை, கல்கி. என்னிடம் மேற்கண்ட தகவலைச் சொன்னவர் இன்றையத் தினம் இசை உலகில் பிரபலமாக இருக்கின்ற சூலமங்கலம் ராஜலட்சுமி சகோதரிகளில் ஒருவர்.