பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மு. பரமசிவம் :

தனங்களோடு 'கல்யாணிக்குக் கல்யாணம்' என்ற பெயரோடு வெளி வந்த அப்படத்தின் கதை வசனம் காதல் பத்திரிகையின் ஆசிரியர் அரு.ராமநாதன் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

'தம் கதை திருடப்பட்டது விஷயமாக கு. அழகிரி சாமி என்ன நடவடிக்கை எடுத்தார் என்று அவரின் துணைவியார் சீதாலட்சுமி அவர்களிடம் கேட்ட போது, அத்துறையில் அவருக்கு (அழகிரிசாமி) நல்ல அபிப்பிராயம் கிடையாது. அதனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் சினிமா உலகத்தை மறந்துவிட்டார். சினிமா உலகமும் அவரை மறந்துவிட்டது என்றார்.

எழுத்துலகில் இன்னொரு சுயமரியாதைக்காரரான வல்லிக்கண்ணன், டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்த லைலா மஜ்னு' படத்திற்குப் பலரின் வற்புறுத்தலின் பேரில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியுள்ளார். பின்னர் எப்.நாகூர், ஏ.எஸ்.ஏ.சாமி, ப.நீலகண்டன் போன்றவர்கள் அவரைப் பாராட்டிப் புகழ்மாலை சூட்டியபோது, தலையை நீட்டாமல் தலைமறைவாகிவிட்டார் வல்லிக்கண்ணன்.

இத்தகைய சூழலில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் தமிழ்சினிமாவில் நுழைந்து பணமும் புகழும் பெற விரும்பித் தம் சுயமரியாதையை, எழுத்துரிமையை இழந்தும் வெற்றி பெற முடியாமல் சுயமரியாதைக்காரர்களாக நடமாடிக்கொண்டிருக் கிறார்கள். இவர்களில் ஒருசிலர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி.