பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மு. பரமசிவம் :

இவரைப் போலவே வல்லிக்கண்ணன் எழுதுகிறார் : "இந்தக் கதையை விந்தன் வளர்த்து இருக்கும் விதம் புதுமையானது; கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிற விதம் புதுமையானது. அவர்களைப் பழகவிட்டு உரையாட வைக்கிற போக்கு ரசமானது; சுவையானது. இடைஇடையே அவர் சுட்டிக் காட்டுகிற உண்மைகள் சிந்தனைக்கு உணவு, ஆங்காங்கே அவர் பொறித்துள்ள சிந்தனை மணிகள் அறிவின், அனுபவத்தின் ஒளிச்சுடர்கள்."

(விந்தனும் விமர்சனமும் 46-41)

திரைப்பட இயக்குநர் டி.ஆர். ராமண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார் :

எழுத்தாளர் விந்தன் நான் மறக்க முடியாத திரைக்கதை - வசனகர்த்தா. கல்கியில் அப்போது வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருந்த அவரது 'பாலும் பாவையும் தொடர் நாவலை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். விந்தனைச் சந்தித்து அதைப் படமாக்கவேண்டும் என்று கதையைக் கேட்டேன். அதற்கு விந்தன், இதில் என் கதாநாயகி மூன்று தடவை கெட்டுப் போகிறாள். இதைத் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று மறுத்தார். விந்தன் எழுத்தில் எனக்கு மோகம் இருந்ததால் வேறு ஏதேனும் கதை கேட்டேன். அதுதான் என் முதல் படமான ‘வாழப்பிறந்தவள்’. பிறகு கூண்டுக்கிளி'க்கு விந்தன் கதை -வசனம் எழுதினார்.'

(தினமணி - வெள்ளிமணி 9.10.87/