பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மு. பரமசிவம் :

5

ஏழை எளியவர்களின் இனிமையான பொழுது போக்குக்கு, அவர்கள் நிஜவாழ்க்கையில் இல்லாத கனவுக் காட்சிகளை நினைத்த மாத்திரத்தில் ஏற்ற வகையில் கலைத்தொண்டு புரிவதாகச் சொல்லப் படும் கலை உலகம், எத்தனையோ இலக்கிய வாதிகளின் இன்னுயிரைப் பட்டென்று பறித்துள்ள வரலாற்றை நன்கு அறிந்த விந்தனும் அதற்குப் பலியானது விந்தையே!

விந்தனும் புதுமைப்பித்தனும் இலக்கிய உலகில் வெவ்வேறு நோக்கும் போக்கும் உடையவர்கள். ஆயினும், சினிமா உலகில் இருவரும் ஒரே போக்கிற்குப் பலியானார்கள்!

எழுத்தாளர்கள் பலர் சினிமாவில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதைக் கண்ட புதுமைப்பித்தனும் அதே ஆசையில் சினிமாவில் சேர்ந்தார். விந்தனும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி சினிமாதான் என்று சினிமாவில் சேர்ந்தார்.

இருவருக்கும் பணமே பிரதானம்; பற்றாக் குறையே வழிகாட்டி

புதுமைப்பித்தன் சினிமா பிரவேசத்தால் அல்லலுற்றுக் கடும் காசநோய்க்கு ஆளாகி, 'வந்தான்