மன்னரது ஈதல் இயல்பை ஏற்றிப் போற்றிய இரு கவிதை வரிகள்கள் வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"ஆலயம் சீரா(கு)மா அரும்புலவர் வாழ்வாரா காலமெல்லாம் தருமம் தழைத்தோங்குமா ஞானச் சாந்தகுணச் சேதுபதி தன்மரபிற்பாற்கரனாம்
לל
வேந்தன் பிறவா விடில்
"தங்கமலையைப் பவுனாக்கி சந்திரன் சார்கிரியை துங்கம் பொருந்திய ரூபாயாக்கிச் சொரிந்திட்டாலும்
திங்கம் குடைதங்கும் பாஸ்கர பூபன் செழுங்கமலச்
செங்கைக்கு பற்றுமாகணநேர செலவினுக்கே ! הר
அத்தகைய பெருங்கொடையாளிதான் மன்னர் பாஸ்கரர். ஈந்து சிவந்த இருகரமும் ஆய்ந்து சிவந்த அருள் நெஞ்சினர். கி.பி.1894ல் சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு அபிநவ நரசிம்மபாரதி இராமநாதபுரம் அரண்மனைக்கு விஜயம் செய்தபொழுது, அவருக்கு குருதட்சணையாக இராமநாதபுரம் சமஸ்த்தானத்தையே தானம் வார்த்தவர். ஈதல், இசைபட வாழ்தல் என்ற
இலக்கிய வரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
பெருங்கொடையாளியும் அரிய பண்பாளருமாகிய மன்னர் பாஸ்கர சேதுபதியின் இளைய சகோதரர் ஒரே தம்பி தான் தினகர் சேதுபதி.