இரு நாட்களுக்குப் பிறகு, அந்த குதிரைகளில் முழுவதும் கறுமை நிறமாக இருந்த குதிரை மட்டும் அரண்மனை பணியாளர்களுக்கு அடங்காமல் அடம் பிடித்து வந்தது. அதனைக் கட்டுப் படுத்தும் அவர்களது முயற்சி பயனற்றுப் போனதால், அவர்கள் மன்னர்
பாஸ்கர சேதுபதியிடம் விவரத்தை தெரிவித்தனர் .
பீட்டன் வண்டியில் பூட்டுவதற்கும். சவாரி செய்வதற்கும், உடன்பட்டு ஒத்துழைக்க மறுத்து வந்த இந்தக் குதிரைக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதனை வைத்துக் கொள்வது சரியல்லவென்றும்
தெரிவித்தனர்.
பணியாளர்கள் பேச்சில் நம்பிக்கை கொள்ளாத மன்னர் பாஸ்கர் சிறிது நேரம் யோசித்து விட்டு அதனை தமது இளவல் தினகரரிடம் அழைத்துச் சென்று ஒப்புவிக்கும்படி சொன்னார்.
அரண்மனை ப் பணியாளர்களிடம் அந்தச் குதிரையைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த தினகரர் அரண்மனைக் குதிரை லாயம் சென்று குதிரையைப் பார்த்தார். பளபளவென கறுமை நிறத்துடன் இருந்த அந்தக் குதிரை அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன் அருகில் சென்று அதன் கழுத்தில் கை வைத்து தடவிச் கொடுக்க முயன்றார். அவ்வளவு தான் ! அந்தக் குதிரைக்கு கோபம் வந்து விட்டது. தலையை ஆட்டி,
பல்லைக் காட்டிக் கனைத்தது.
32