38 தீபம் யுகம் முதலியவர்களின் எழுத்துக்கள் தீபத்துக்கு ஒளியும் வலிமையும் சேர்த்தன. புகழ்ப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த அசோகமித் திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் முதலியோருக்கு தீபம் நல் வாய்ப்புகள் அளித்தது. புதிதாக எழுதத் தொடங்கியிருந்த வண்ணதாசன். நாஞ்சில் நாடன், கே. ராமசாமி, மோகனன், பா. அமிழ்தன் போன்றோருக்கு 'தீபம் வளர்ச்சிப் பாதை அமைத்துக் கொடுத்தது. வாசகர்களையும் இலக்கிய முயற்சிகளில் பங்கு பெறும் படி துண்டி வந்தது 'தீபம் தரமான கடிதங்களுக்கு பரிசு அளித்தது. படித்த புத்தகங்கள் பற்றி ரசனைக் கட்டுரைகள் எழுதவும், தீபம்’ கதைகளை விமர்சிக்கவும், குறிப்பிட்ட சில புத்தகங்களைக் குறித்து விரிவான விமர்சனங்கள் எழுதவும் வாசகர்களை ஊக்குவித்து உற்சா கப் படுத்தியது. --- தமிழக நாடோடிக்கதைகள், பல நாடுகளின் குட்டிக்கதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வந்தன. - 'தீபம் திரைப்படம், நாடகம், அரசியல், சமூகப்பிரச்சினைகள், கலாசார விஷயங்கள், விவசாயம், பல்வேறு தொழில் முயற்சிகள் முதலியவற்றிலும் அக்கறை காட்டியது. அவை சம்பந்தப்பட்ட தனிக் கட்டுரைகளையும் தொடர் கட்டுரைகளையும் அவ்வப்போது பிரசு ரித்தது. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டில், தீபம் மிகச்சிறப்பான ஒரு பணியைச் செய்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை விரிவாக வெளியிட்டதுடன், மாநாடட்டில் வாசிக்கப்பட்ட நல்ல ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கத்தை தொடர்ந்து வெளியிட்டது. இலக்கிய அன்பர்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் அரிய கட்டு ரைகள் பலவற்றை 'தீபம்'.பிரசுரித்தது.
பக்கம்:தீபம் யுகம்.pdf/39
Appearance