உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4○ தீபம் யுகம் பான்மை இங்கே நம்மிடையே மட்டும் இருக்கிறது. மலையாள எழுத் தாளராகிய தகழி அண்மையில் ஒரு மகாநாட்டில் பேசும் போது ‘எங்கள் கேரளத்தில் நல்ல முற்போக்கு இலக்கியம் வளருமே ஒழிய நச்சு இலக்கியமோ, நசிவு இலக்கியமோ, போலி இலக்கியமோ வளர்வதற்கான சூழ்நிலை கிடையாது' என்று பெருமையோடு குறிப் பிட்டிருக்கிறார். வங்காளிகளும் தங்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது இப்படிப் பெருமையாகவே சொல்லுகிறார்கள். வலு வான நல்ல அபிப்பிராயங்களை உருவாக்கிச் செயற்படுத்த முடிந்த பத்துப் பெரிய எழுத்தாளர்களுக்குள்ளாவது - வங்காளத்திலும் மலையாளத்திலும் - தங்கள் மொழி, தங்கள் இலக்கியம் - என்ற அளவில் கருத்து ஒருமைப்பாடும் பெருமிதமும் இருக்கிறது. மலையாளிகள் தகழியையும் வங்காளிகள் தாரா சங்கரையும் உலகுக்குக் காட்டிப் பெருமைப் பட வழியிருக்கிறது. நம் தமிழ் நாட்டிலோ - நமக்குள்ளேயே நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த் தாற் போன்ற நிலைமை இன்னும் இருக்கிறது. தமிழ் மறுமலர்ச்சி இலக்கியம் உண்மையிலேயே வளர வேண்டும் என்ற எண்ணமுள்ள வர்களும், முற்போக்கு அடிப்படையில் ஒன்று படுகிறவர்களும் ஓர் இலக்கிய ஒருமைப்பாடு கொண்டு முழுமூச்சாகப் பாடுபடும் நன் னாள் இங்கு வரவேண்டும். நம்முடைய பெருமைகளைக் கொண்டாடவும் தமக்குள் ஒற் றுமை ஒருமைப்பாடு எதுவுமில்லை. நம்மிடையே தேங்கிவிட்ட சிறுமைகளை உதறி ஒதுக்கவும் நமக்குள் துணிவு எதுவும் உருவாக வில்லை. ஏதோ பழைய பத்துப் பேரையே திரும்பத் திரும்பச் சொல்லிபு பாராட்டுகிற சிலரும், அதை ஒப்புக் கொள்ளாத சிலருமாக பிரிந்து பட்டிருக்கிறோம் நாம் திறமையுள்ள புதிய நல்ல எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துகிற விமர்சகர்கள் நமக்கு வேண்டும். இலக்கிய மாநாடுகள், கருத்தரங்குகளில் அசல் இலக்கியத்துக் குப் பாடுபடும் நல்லவர்கள் ஒதுக்கப்பட்டுக் காக்கை பிடிக்கும் குண மும், சிபாரிசு பிடிக்கும் திறனும் உள்ளவர்கள் ஒடிப் போய் ஒட்டிக் கொண்டு மாலை போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/41&oldid=923235" இலிருந்து மீள்விக்கப்பட்டது