உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 துணிந்தவன் இந்த முறையினால் இலாகா அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்ற பிள்ளையவர்கள் ஊராரிடம் நற்பெயர் சம்பாதிப்பதற்காகக் கோயில் தானதர்மம் முதலியவை கவில் கொஞ்சம் தாராளத்தனம் காட்டுவார். ஊரார் குறை களை விசாரித்து ஆலோசனைகளும், தீர்ப்புகளும் வழங்கு வார். தனிப்பட்ட முறையில் நலம் பெறுவதற்காக மதுக் குடி, தாசி உறவு முதலியவற்றில் ஈடுபாடுடைய ரசிக ராகவும் வாழ்ந்தார். தந்தையின் குணங்கள் மாதவனிடம் படித்திருந் னே என்று சொல்வதற்கில்லை. சிதம்பரம் பிள்ளையின் போக்கை அங்கீகரிக்க முடியாமலும், இருப்பினும் ஆட்சேபிக்கத் திராணி இல்லாமலும், அனைத்தையும் ஹிந்து தர்மபத்தினிக்கே உரிய பொறுமையோடும் பண் பாட்டு நிறைவோடும் சகித்துக்கொண்டு வந்தாள் மீனாட்சி' அம்மாள். அந்தத் தாய் மனவேதனை குமுறிக்கொதிக்கிற போதெல்லாம் மாதவனை முன்னால் வைத்துக்கொண்டு 'ஒரு பாட்டம் புலம்பித் தீர்ப்பாள், தனது 'அம்மாவைக் கொண்டிருந்த பையனுக்கு அவள் மீது அனுதாபமும் அன்பும் அதிகரித்ததோடு, தந்தை மீது கோபமும் கசப்பும் ஏற்பட்டிருந்தன. அவர் செயலுக்கு அடிப்படைக் காரணங் களான மது, சர்க்கார் உத்தியோகம் முதலியவைகள்மேல் ஒரு வெறுப்பும் பிறந்திருந்தது. தனது தாயின் உள்ளத் துக்கு மகிழ்வும் அமைதியும் அளிக்கும் வகையில் தான் மிகவும் நல்லவனாக வளர வேண்டும் என்று ஆசைப் பட்டான்; அந்த ஆசையைக் காப்பாற்றியும் வந்தான் அவன். - தந்தையின் செலவுகளாலும், மரணப் படுக்கையில் கிடந்தபோது அவருக்குச் செய்த வைத்திய சிகிச்சைகளி னாலும் குடும்பச் சொத்தும் கைப்பணமும் தீர்ந்து போயின. கடன்தான் மிஞ்சியது. சிதம்பரம் பிள்ளை செத்த பிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/26&oldid=923497" இலிருந்து மீள்விக்கப்பட்டது