இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வண்டிக்காரன்
கானடா ஆதி
எடுப்பு
நேரத்தை வீணாக நீட்டாதே!—மாடே!
நேரிழை வழிபார்க்கும் வீடோ நெடுந்தூரம் !
மேல் எடுப்பு
ஓரத்தில் நின்றென்னை ஓயாமல் பார்த்திருப்பாள்!
ஒவ்வொரு நாழியுமென் உரையில் திளைத் திருப்பாள்!
அமைதி
கல்கி விகடனிடம் கற்ற நடையிதுவோ?
கல்லார் கவிதை பொருள் இல்லா நடையிதுவோ ?
கல்ஆமை ஓட்டமோ காரெருமை நடையோ?
மெல்ல நடக்கின் றாயே! வீடோ தொலைவிருக்கே !
கம்பன் நடைவேண்டாம்! சேக்கிழான் நடைவேண்டாம் !
காஞ்சி கச்சியப்பத் தம்பிரான் நடைவேண்டாம் !
கொம்புத் தமிழ்த்தேன்மிகு சங்க நடைபோல
கொல்லேறு பாரதி தாசன் நடைபோடே !
8