இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உழவன்
பியாக்
ஆதி
எடுப்பு
உரியவன் நிலத்துக்கு உழவன்!—உண்மை
தெரிந்தபின் மறைப்பவன் திருடன்!
மேல் எடுப்பு
விரிந்த மனப்பாங்கால் உலகிற்கே உழைத்து
விரிகதிர் கொண்டுபல் உயிர்போற்று வான் என்றும் !
அமைதி
உழுவார் உலகத்தார்க் காணி! நாளும்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை தம்பி!
பழுதின்றிப் பாடு பட்டுழைப்பாய்! எங்கும்
படர்ந்திடும் ஆரியப் புல்லுருவி அழிப்பாய்!
9