இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்னும் திரும்பாததேன்?
பிலகரி ஆதி எடுப்பு
இன்னும் திரும்பாத தேன்?- தோழி! பொன்னீட்டி வரச்சென்ற என்னுயிர்க் காதலர்
மேல் எடுப்பு
மின்னலும் மேகமும் என்னுயிர் வாட்டுதே!வேலி படர்முல்லையோ வேதனை யூட்டுதே !
அமைதி
வருவார் வருவா ரென்று வழிமேல் விழிவைத்து வாடி வதங்க உயிர் ஓடாத ஓடானேன் ! பொருளை விரும்பும் நல்லோர் போக்கும் மாறிடும் போலும்! பூவையே கார்காலம் ஓடி வருகு தந்தோ- செந்தீச் சுடர்வீசும் அந்தி மயக்கினில் சேவல் பிரிந்த பெட்டை கூவலைக் கேளாரோ!பந்தி பந்தியாய்க் கொக்கு வானில் பறக்குதே ! பாவையே! கார்காலம் வந்தது வந்ததே!
26