பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1 . திருக்கச்சி ஏகம்பம்

9

காரகத்தாய் கார் வானத் துள்ளாய் கள்வா

காமருபூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதுஎன் நெஞ்சின் உள்ளாய்

பெருமான் உன் திருவடியே பேணினேனே.

-திருமங்கை ஆழ்வார்.

கச்சியம்பதியில் சங்கராசாரிய மடம் ஒன்று இருக்கிறது. இம்மடம் கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் உளது. கங்கை கொண்டான் மண்டபத்தில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வரதராசப்பெருமான் தம் பெருவிழாவின்போது வந்து தங்குவர். இதனைக் கங்கணா மண்டபம் என்பர்.

காஞ்சி ஏகாம்பரநாதர் பெருவிழா பங்குனியில் வெகு சிறப்பாக நடக்கும். இவ்விழாவில் கண்டு களிக்கவேண்டிய திருவிழாக் காட்சிகள் அதிகார நந்தி விழா, இடபவாகன விழா, அறுபத்துமூவர் விழா, இராவணேஸ்வரன் வாகன விழா, வெள்ளிரத விழா, மாவடிசேவை விழா என்பன.

இவ்விழாக்களில் ஒரு நாள் ஏகாம்பரநாதர் தம் தடும்பத்துடன் சின்ன காஞ்சிபுரம் (வரதராசப் பெருமாள் திருக்கோயில் உள்ள இடம்) செல்வர். சென்று ஒரு மண்டபத்தில் தங்குவர். இரவு ஏழு, எட்டு மணிக்குமேல் விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் வரதராசர் கோவிலுக்குச் செல்வர். அதுபோது வரதராசப் பெருமாள் கோவில் அர்ச்சகர் தீபாராதனை மரியாதை செய்வர் பூசித்த பொருள்களை அக்கோவிலின் குளத்தில் விட்டு விடுவர் என்பர். இவ்வாறு செய்வதற்குக் காரணம், சைவத் தெய்வங்கட்குப் பயன்படுத்தப்

கார் -மேகம், காமரு - விரும்பப்படும்,மன்னும் நிலைத்திருக்கும், பூ - அழகிய, ஊரகம், கார்வனம் என்பன திருமால் கோவில்கள்.