பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச் சி ஏகம்பம் $ 3

னத்தைப் பாடியவர். இங்குள்ள உற்சவ முர்த்தி, யின் திருவுருவில்தான் வச்சிராயுதம் உளது. இத் தலத்தின்மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்கள் நாற்பத்துநான்கு உள. இத்தலம் குமரகோட்டம் எனப்படும். (கோட்டம் - கோவில்) குமரகோட்டத் தமர்ந்த பெருமாளே' என்று அருணகிரியார் பாடி இருப்பதைக் காண்க. ஏகாம்பரநாதர் கோவிலும், காமாட்சி அம்மன் கோவிலும், இடையே குமரன் கோட்டமும் இருப்பது சோமாஸ்கந்தர் மூர்த்தம் போன்று அமைந்த அமைப்பாகும்.

அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனே வெற்றிக் கதிர் வேலா வெற்பைத் தொளை சீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே -திருப்புகழ். இத்தலத்தில் பார்க்கவேண்டிய மற்ருெரு சிவா லயம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இஃது இராசவீதியில் உள்ளது. இது திருமால் ஆமை வடிவில் பூசித்த தலம். (கச்சபம் - ஆமை.) இந்தக் குறிப்பை ஆலயத்துள் காணலாம். கோவிலுக்குள் பெரிய குளம் உளது. இச் சிவாலயமே அன்றிச் சுரஹரி ஈஸ்வரர் கோவிலும் உளது. இப்பெருமான் காய்ச்சலை நீக்குபவர். மற்றும் பல தலங்களும் உள்ளன. இந்த உண்மையினே அப்பர் கச்சிப் பல தனியும் என்று கூறுதலால் அறியலாம். இத்தலத்தையும், கோவிலேயும் மாணிக்க வாசகர் தேசம் எல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பம் செம் பொற்கோயில் என்று புகழ்ந்து கூறுகின்ருர்,

அற்றைக்கு அந்தந்த நாளுக்கு. அத்தம் பொருள் . பற்றை - கடவுள் அன்பை வெற்பை - கிரவுஞ்ச மலையை. சீலா - ஒழுக்கமுடையவனே போதா - ஞானதேசிகனே.

கற்றுற்று - தியானித்து.