பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் # 9

தாதியும் (இவர் நம்பியாண்டார் நம்பிகட்கு முற் பட்டவர்) சிவஞான முனிவர் பாடிய கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகமும், திருவேகம்பர் கச்சி ஆனந்த ருத்திரேசுவரர் ஆனந்தக் களிப்பும், திருவேகம்பர் யமக அந்தாதியும், பூண்டி ரங்கநாத முதலியார் பாடிய கச்சிக் கலம்பகமும் உண்டு.

திஞருான சம்பந்தர் பாடிய பதிகம் நான்கும், அப்பர் பாடிய பதிகம் ஏழும், சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றும் ஆகப் பன்னிரண்டு பதிகங்கள் இத்தலத் திற்கு உள்ளன. மாணிக்கவாசகர் இத்தலத்திற் கெனத் தனிப்பட்ட பாடலைப் பாடிலரேனும், தம் திருவாசகத்தில் இத்தலத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள் 守T醇度。

இத்தலத்துப் பதிகங்களின் மூலம் நாம் அறிவன :

திருஞான சம்பந்தர் தம் முதல் திருமுறையில் கச்சி ஏகம்பநாதனத் தொழுதால் துன்பம் நீங்கும் என்பதனை ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் குறிப்பிட் டுள்ளனர். முதல் திருப்பதிகத்தின் பண் மேகராகக் குறிஞ்சி, இப்பண் இக்காலத்து நீலாம்பரி போன்றது என ஒருவாறு கூறலாம். இப் பதிகப் பாடல்களே அறுசீர் விருத்தம் என்று கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு பாடலும் நான்கு சீர்களேக் கொண்டு ஒவ் வோர் அடியும் அறுசீர்களேப் பெற்று வருவது.

ஏகம்பம் தொழுதேத்த இடர் கெடுமே ' 1 ஏகம்பம் ஏத்த இடர் கெடுமே ' * ஏகம்பத்துறை ஈசன் சேவடி ஏத்த இடர்கெடுமே '

ஏகம்பம் தொழி வல்வினே மாய்ந்தறுமே ' என்னும் வரிகளில் இவ்வுண்மைகளைக் காண்க.

ஏகம்பம் - ஏகாம்பரநாதன் கோயில் ஏத்த போற்ற. உறை வாழும். சேவடி - சிவந்த பாதம்.