உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கொண்டு வருதலின் குறள் (குட்டையானது) என்றும், இருக்குவேதம்போன்று அரிய கருத்துகளைக் கொண்டிருத்தலின், திரு இருக்குக் குறள் என்றும் பெயர் பெற்றுள்ளது. இப் பதிகப் பண் கொல்லி. இதனை இக்காலத்து நவரோசு இராகம் என ஒருவாறு கருதலாம். இந்தப் பதிக யாப்பு வஞ்சித்துறை. அதாவது நான்கடிகளேக் கொண்டு, ஒவ்வோர் அடியும் இரு சீர்களைப் பெற்று வருவது.

இதில் அமைந்த பாடல்கள் மக்கட்கு உபதேசம் செய்யும் போக்கில் உள்ளன. இதனை 'திருஏகம் பத்து ஒருவா என்ன மருவா வினேயே 'திரு.ஏகம்பம் விதியால் ஏத்தப் பதியாவாரே "திருஏகம்பம் பலியால் போற்ற நலியா வினேயே திருஏகம்பம் பரவா ஏத்த விரவா வினேயே'. 'திரு.ஏகம்பத்து உடையாய் என்ன அடையா வினேயே’ ‘நிலவே கம்பம் குலவா ஏத்தக் கலவா வினேயே நெறியே கம்பம் குறியால் தொழுமே 'கச்சிச்செறிகொள் கம்பம் குறுகுவோமே என்னும் வரிகளில் காண்க.

கச்சிப்பதி கருவார் கச்சி, மதியார் கச்சி, வரமார் கச்சி, படம்ஆர் கச்சி, நலம் ஆர் கச்சி ’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது

இப்பதிகத்தைப் பாடப் புகழ் நச்சும். அதாவது புகழ்தானே விரும்பி வந்தடையும் என்பதாம்.

மற்ருெரு பதிகம், திருஇயமகம் என்பது. இயம கம் என்பது மடக்கு என்னும் அணியைச் சார்ந்தது.

வினே - பாவங்கள், மருவா .. வந்து சேரச. ஏத்த - போற்றினுல், பதி ஆவார் - தலைவர் ஆவார். பலி - பூசைக் குரிய பொருள்கள். நலியா - துன்புருத்தா. வீரவா - வந்து சேர நிலவு-விளங்கும். குலவா. மகிழ்ந்து. செறி-நெருக்கம். கரு.எல்லாவற்றிற்கும் வித்தாக இருக்கிற, மதி=அறிவுநிறைந்த . படம் - கொடி,